நறுக்.. துணுக்…
பவள சங்கரி
நேற்று , ஈரோடையில் ஒரு பாலத்துக்கருகில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் காதில் விழுந்த வாழ்க்கைத் தத்துவ முத்துகள்!
சில்க் சிப்பாக்காரர் : சே, பணக்கார வீட்டில் கடைசிப் பையனாவும், ஏழை வீட்டில் மூத்த பையனாவும் பொறக்கவே கூடாது சாமி…..
கதர் சிப்பாக்காரர் : ஏனுங்க இப்படி அலுத்துக்கறீங்க…..?
சி.சி. : பின்ன என்னங்க…. பணக்கார வீட்டில கடைசி பையனா பொறந்தா, அண்ணங்காரன் எல்லாத்தையும் அனுபவிச்சிப்பிட்டு, மிச்சம் மீதியை குடுத்துப்போட்டு,இதில அதிகாரம் வேற…. அங்கன எளவுக்குப் போடா…. இங்கன கன்னாலத்துக்குப் போடா….. நோம்பி நாளும் அதுவுமா, வசூலுக்குப் போடான்னு கடுப்பேத்றானுவ…..ஏழை ஊட்டுல மூத்தவனா பொறந்தா கேட்கவே வாணாம்….. அத்தனை பாரமும் அவந்தலைமேலத்தானே……..
க.சி: அட… ஆமால்ல…. சரி ….சரி அடுத்த செம்மத்துல ஒத்தப்புள்ளையா பொறக்கோனுமின்னு நேந்துக்கோங்க……….
படத்திற்கு நன்றி - http://www.shutterstock.com/pic.mhtml?id=63255343
நன்றி - வல்லமை இணைய இதழ்.
:) ரசிச்சேன் பவழா
ReplyDelete:)உண்மை தான்.
ReplyDeleteவாழ்க்கையில்தான் எத்தனை அனுபவம் !
ReplyDeleteநனி நன்றி நண்பர்களே.
ReplyDeleteஜூப்பரு.. :-))
ReplyDeleteநடுப்பிள்ளையா பிறந்தவங்களோட நிலையையும் கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க ;-)