Sunday, September 9, 2012

மொறு மொறு கிரில்ட் உருளை விரல் கறி


பவள சங்கரி

கிழங்கு வகைகளைப் பார்த்து அச்சமா? தேவையில்லை நண்பர்களே.. வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் அதிகமில்லாமல் செய்து சாப்பிடலாம். கிரில் அடுப்பில் 2 ஸ்பூண் எண்ணெய் மட்டுமே வைத்து செய்த மொறு மொறு உருளைப் பொரியலைப் பாருங்கள்! உருளைக் கிழங்கை தோல் சீவி விரல் நீளத்திற்கு ஓரளவிற்கு சன்னமாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவிவிட்டு உப்பு கலந்த நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்பு இரண்டு சிறு கரண்டி எண்ணெய் விட்டு பிரட்டி, அதை கிரில் அடுப்பில் வைத்து பொறிக்கவும். அதிகப்படியான எண்ணெயையை வெளியே துப்பிவிடும். அதை எடுத்து மிளகுத், உப்புத் தூளும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.


4 comments:

  1. எளிய முறையில் செய்திட அருமையான குறிப்பு.

    ReplyDelete
  2. செய்முறை விளக்கங்களும் படங்களும் அருமை. நாக்கில் நீர் வரவழைப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. பார்க்கும் போதே சாப்பிடும் ஆசை வருகிறது

    ReplyDelete
  4. இதுதானே நித்தச் சாப்பாடு இங்கே...ஹிஹிஹி !

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...