Tuesday, April 22, 2014

புவியீர்ப்பு!



பவள சங்கரி




எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்குமாம்
சொல்கிறார்கள் அவர்கள்.
எரிகின்ற கொள்ளிகள் கூட அருகிலுள்ள  அனைத்தையும்
பாரபட்சமில்லாமல் ஈர்க்கும்.
பரியும் நரியும் பரிகாசமாய் கைகொட்டி எக்களித்தாலும்
மாடு என்றும் மாடாய் உயர்ந்து நிற்கும்.
காடு போகும்வரை கட்டியவனைக் கருத்தாய் கபடமின்றி
வீடுபேறு பெற சாந்தமாய் வாழவைக்கும்.

பாடுபட்டு சேர்த்த பாவமதை பாதகமில்லாமல் ஓடுநீக்க
மௌனமொழியது மங்கலம்பாடி வாழ்த்தும்.
தேடிய தோழமையும் வாடிய வானமதும் வாதனையின்றி
நாடிய நான்மறையும் நட்பாய்ப் பூக்கும்.
வாடிய வதனமும் வஞ்சனையின்றி வானோர்போற்றும்
கவியும் கானமும் களிப்போடு கனிதரும்.
புவியும் புகழ்மாலைச் சூடும் தமிழும் தத்துவமும் பார்புகழும்
தரணியெங்கும் வேதமாய் முழங்கும்!!!


முகநூலிருந்து சுட்ட படத்திற்கு நன்றி :-)))

1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...