கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் - (1)பவள சங்கரி

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் என் மொழி பெயர்ப்பில் - (1)கவிதை என்பது மனோவசியத்திற்கான ஞானம்
ஞானம் என்பதோ மனதினூடே இசைக்கும் கவிதை.
நம்மால் ஒருவரின் மனதை வசியப்படுத்த முடியுமானால், 
அதே நேரம் அவர் மனதில் நம்மால் இனிய கீதமிசைக்கவும் முடியும்.
பின்னர் உண்மையில் இறை நிழலில் வாழக்கூடும் அவனால்.
அகத்தூண்டுதல் எப்போதும் இசைக்கும். புத்துணர்வு ஒருபோதும் விளக்கமளிக்காது.

கலீல் ஜிப்ரான்

Comments

Post a Comment