சிலைவடித்த சிற்பி யாரோ?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் குமரா!அன்புமகனாய் அவதரித்த இந்நாளொரு
பொன்னாளென எந்நாளும் உளம்நெகிழும்
தாயிவளின் தவப்பயனாய் உதித்தவனை
தரணிபோற்ற சீரும்சிறப்பும் நிலைத்திட
ஆலவாய் அண்ணலை அம்பிகையை
நாளும் தொழுது பணிவேனே!

சிலைவடித்த சிற்பியெனை சிகரமேற்றி
மலையடியில் ஊற்றெடுக்கும் உயிர்நீரென
மகன்வடிவில் பால்வடியும் முகமென
பார்புகழும் பரமனின் பதமலர்தொழும்
பாங்கினன் மீனாட்சியின் தோள்கிளியாய்
அன்னையின் அருமைப் புத்திரன்நீ!

அகண்டமாக்கிய அறிவை அருள்நிறை
பார்வையால் வீழ்மாந்தருக்கு ஊன்றுகோலாயிரு
சூழ்துயர்யாவும் கதிர்கண்ட பனியேபோல்
உதிர்ந்துபோம்! விண்ணவரும் போற்றியுனை
பூச்சொரிந்து பல்லாண்டுவாழ வாழ்த்தியுனை
சீராட்டிப்பாராட்டி பார்புகழும் மானிடனாய்
அருமைத்துணையுடன் அன்புச் செல்வங்களுடன்
நல்நட்புகள் உற்றார் உறவினருடன்
நிறைவாய்வாழ நித்தமும் காத்தருள்வாரே!
நானுமுனை பல்லாண்டுவாழ உளமாரவாழ்த்தி
நான்முகனையும் நமச்சிவாயனையும் பரவுகின்றேனே!

இனிய மலரும் நினைவுகளுடன்! பேர் சொல்லும் பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா!


Comments

Popular posts from this blog

'இலைகள் பழுக்காத உலகம்’

உறுமீன்

கடல் கால் அளவே............