சுதந்திரப்பள்ளு! ஊருக்குகந்த பாடமதையள்ளு!
பாடும் புள்ளும் ஊரும் தேனும் ஒன்றெனக்கொள்ளு!
ஓடிக்களைத்த ஒத்தைக் குயிலொன்னு
ஓயாமல் ஓசையெழுப்பியபடி
கூவிய மொழியெல்லாம் முச்சந்தியில்
முக்காடிட்டு முகம் புதைத்தபடி
தேடிய புள்ளின் கலங்கிய சித்தம்
பதறாமல் சிதறாமல் பறந்தபடி
சிதறிய நெல்மணிகளில் சிலவும்
பதறிய பண்ணிசையில் பலவும்
அளைந்த மூக்கின்நுனி வழிந்தபடி
உலவிய உள்ளமதில் உழன்றபடி
சித்தம்சோராமல் சிந்தைகலையாமல்
சிறப்பு குறையாமல் சிம்மம் குலையாமல்
சீரும் சிதறாமல் சர்வமாய் நிறைந்திருக்கும்
நித்தம் பாடிக்களித்திருக்கும் கூவிக்
குளிர்ந்திருக்கும்! இலையுதிரும் காலமும்
வண்ணம்நிறை கவின்மிகு காட்சிக்கோலம்!
திண்ணம்வளர் தீதில்லா திருக்காட்சிமயம்!!
சுதந்திரப்பள்ளு! ஊருக்குகந்த பாடமதையள்ளு!
பாடும் புள்ளும் ஊரும் தேனும் ஒன்றெனக்கொள்ளு!
No comments:
Post a Comment