பவள சங்கரி
எஸ்.எஸ்.எம். குழும கல்லூரிகளின் சார்பில், ஆகஸ்ட் 22 & 23 (2014) ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடந்தேறியுள்ளது, சர்வதேசப் பெண்கள் தொழில் முனைவோர் மாநாடு. இதில் கலந்து கொண்ட மாணவிகளும், தொழிலதிபர்களும் மிக உற்சாகமாக, மன நிறைவுடன் கருத்தளித்துள்ளது இம்மாநாட்டின் முழுமையான வெற்றியை பறை சாற்றுகிறது. நேற்று (23, ஆகஸ்ட்) நிறைவுப் பகுதியில் என்னைப் பேச வாய்ப்பளித்த, கல்லூரித் தலைவர் திரு கவாலியர் டாக்டர் எம்.எஸ். மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த நிகழ்ச்சி இத்துனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பக்கத் துணையாக இருந்த பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ். பாலமோகன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர், டாக்டர் கே. ராமசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் டாக்டர். பி. கிருஷ்ண குமார், முனைவர், எம். இந்துமதி, முனைவர் ஜெ.எஸ். சுபாஷிணி, திரு என். நாராயண ராவ், திட்டப்பணித் தலைவர் முனைவர் ஜெ. மோகன்ராஜ், மற்றும் முனைவர் எஸ்தர், நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கிய எம். பி. ஏ. மாணவிகள், பங்கு பெற்ற அனைத்து ஏனைய பேராசிரியர்கள், தொழில் முனைவோர், பேச்சாளர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.
இந்த நிகழ்ச்சியின் வரவேற்பைப் பார்த்தவுடன், உண்மையில் பாரதி கண்ட கனவு பலிக்க வெகு தொலைவு பயணிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. நன்றி திரு மதிவாணன் சார்.
No comments:
Post a Comment