Pavala Sankari
PRINCETON BATTLEFIELD STATE PARK
ஜனவரி 3, 1777, பயங்கரமான அமெரிக்கப் புரட்சிப் போர்க்களத்தில், பிரித்தானியப் படைகளுடனான மோதலில் ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் தன் முதல் வெற்றியைப் பெற்று, அமெரிக்கச் சரித்திரத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். கற்களினாலான கருவிகள், அம்பு தலைகள் போன்றவைகள் ஏராளமாக சுற்று வட்டாரத்தில் கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அமெரிக்கர்கள், ஐரோப்பிய ஒப்பந்தத்திற்கு முன்பாக போர்க்களமாக பயன்படுத்தியதை அறிய முடிகிறது என்கின்றனர்.
1776 இல், கோடை காலம், இலையுதிர் காலம் என்று தொடர்ந்த தோல்விக்குப் பிறகு, பிரித்தானிய மற்றும் ஜெர்மானியப் படைகளின் அழுத்தத்தினால் ஜெனரல் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்கப் படைகள் தென்புறம் நோக்கி, நியூ ஜெர்சி வழியாக, பென்சில்வேனியா செல்லும் டெலாவேர் ஆற்றின் மீது பின்வாங்கியது. பிரித்தானியப் படைகள் பிலடெல்பியாவின் வடக்கில் ரேரிட்டன் ஆற்றிலிருந்து டெலாவேர் ஆறு நோக்கிய, நகரத்தின் பிரதான சாலைகளில் அணிவகுத்திருந்தன..... வாஷிங்டன் நொந்துவிட்டார். ஒரு உறுதியான முடிவோடு, புரட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார். டிசம்பர் 26, 1776 இல் டிரெண்டனில் ஹேசியன் கேரீசனை தோற்கடித்தார். பிரித்தானியா மீண்டும் பிரின்ஸ்டனுக்குப் படையை திரும்ப இழுத்துக்கொண்டன. ஜனவரி 1 இல் லெப்டினெண்ட் ஜெனரல் சார்லஸ் கார்ன்வாலிஸ் வந்து படையை வலிமைப்படுத்துகிறார்.. புரட்சிக்குப் பெரும் திருப்பு முனையாக அமைந்தது இது.. இப்படிப் போகிறது போரின் வரலாறு... போரின் முக்கியமான இறுதிப் பத்து நாட்கள் - எதுவுமே முடியாது போன நிலையில், கடுமையான குளிர் காலத்தில், ஒரே மூச்சில் தம் பிடித்து வெற்றி கண்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டார்கள்...
No comments:
Post a Comment