Thursday, December 18, 2014

உடலும், மனமும் இணையும் தருணம்!



பவள சங்கரி



இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை.   யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும்  ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம்  நம்மை நாமே உணரச் செய்கிறது.  மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.  சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம்  பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம்,  ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு  ஆயுளும் கூடும். 
ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை  கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும்.  நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். 


5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது. 

ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட  சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை  நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.


உலக அளவில் பல நாடுகளில் யோகப்பயிற்சிகள் பரவியுள்ளன. அமெரிக்காவில் யோகாசன வகுப்பில் பயிற்சி பெற பல எதிர்பார்ப்புகளுடன் சென்றபோது சில ஆச்சரியங்களும் காத்திருந்தன. ஆம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் அமைதியான தியானத்தில் ஆரம்பித்து, ‘சிவாய நம’ என்ற திருமந்திரமும் தொடர, சீன யோக மந்திர மெல்லிசை மற்றும் மேலை நாட்டு மிக மெல்லிய மதுர கீதங்களுடன் மிக இனிய அனுபவங்களாக  அமைந்திருந்தது லிண்டா அவர்களின் யோகாசன வகுப்பு!


யோகாசனம் செய்வதற்குரிய பொதுவான நியமனங்கள்:

* பொதுவாக காலை நேரங்களில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததென்றாலும் மாலையில் செய்ய வேண்டிய தேவை வரும்போது, உணவு உண்டு  மூன்று மணி நேரத்திற்கு பின்னரே, அதாவது உணவு செரிமானம் ஆன பிறகே யோகப்பயிற்சி  செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் வழமையுடையவர்களாயின் பானம் அருந்திய அரை மணி நேரத்திற்குப் பின்னரே பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.


* அன்றாடம் ஆசனங்களைச் செய்வதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

* ஒவ்வொரு முறையும் ஆசனத்தின் முடிவில்  இரு முறைகள் மூச்சை நன்றாக இழுத்து விட்டு ஆசுவாசம் கொள்ளல்  வேண்டும்.


* ஆசனங்களைச் செய்யும் போது அது உடலுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல்,  தங்களால் இயன்ற அளவிற்கு மிக இலகுவாகச் செய்யும் வண்ணம் இருத்தல் நலம். 

* அதேபோல ஆசனங்களைச் செய்து  முடிக்கும் போது 5 முதல் 10 நிமிடங்கள் வரை சவாசனம் என்ற ஓய்வு ஆசனம் செய்த பிறகே  முடிக்க வேண்டும்.

 * இறுதியாக  பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்து, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது மேலும் நன்மையளிக்கும்.


* தினசரி அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசனப் பயிற்சி செய்வது சிறந்த பலன் அளிக்கக்கூடியது.
யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
நீர் ஆகாரமாக  இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.

* யோகப் பயிற்சி முடிந்த பின்பு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.

* யோகாசனப் பயிற்சி செய்து முடித்த பின்பு 15 நிமிடங்களுக்குப் பின்னர்  ஆகாரம் எடுத்துக்கொள்வது நலம்.

திருமிகு லிண்டா அவர்களிடம் யோகாசனம் குறித்து கேட்ட செவ்வி மற்றும் அவர் அளித்த விடைகளும் இதோ :



1. Could you please tell me why did you choose 'Yoga' as your career in particular? 

Linda :  I actually chose a career in fitness, which I still love after many years.  However, fitness can be rough on the physical body and I became very stiff and sore and decided to try yoga as a means to relieve this.  This began my Yoga Journey in 2002.  I then enrolled in the American Yoga Academy for my 200 hour teacher training and after that 40 hour training in an Iyengar style and I have been teaching yoga ever since.  


2. what is the PHILOSOPHY OF YOGA?

A simple Philosophy of Yoga is that the Mind, Body and Spirit are all connected.  
Yoga is a collection of spiritual techniques and practices; however, most yoga which is practiced in the West is Hatha Yoga and focuses on movement of the body mostly and eventually clearing the mind thru breath.  

3. Is yoga a collection of spiritual techniques and practices?

Linda : Spiritual techniques are usually not included, especially in a gym setting.


4. About : The Bhagavad Gita, The Upanishads, Vedas - Is there any connectivity with Yoga?

Linda : Bhagavad Gita, the Upanishads, and Vedas all reference yoga so there is a definite connection between them.

5. Do we need to Practice Yoga at Home?

Linda : Yes, I believe that you should practice yoga at home especially during times of stress or tightness in the body.  Those with chronic issues should practice yoga daily if possible.  Yoga in general is great for the immune system and overall state of being. 

6.  whether there is any yoga practice where one can get relief for chronic diseases?

Linda : Yoga certainly can provide relief for chronic diseases.  Examples are hip openers for sciatica and backbends to stimulate the kidneys. 


7.  Sankhya philosophy, one of the oldest and most influential of the six systems (darshans) of Indian thought, has had a profound impact on the beliefs, values and concepts used in… what do you say?

Linda : Sankhya philosophy – I am not familiar with this philosophy and do not know if there is a connection to yoga.

8. What is commonly considered Yoga in the West is in actuality just one of the many paths of Yoga, and is technically called Hatha Yoga. The oldest and most widely used ancient text on the physical practices of Hatha Yoga is the Hatha Yoga Pradipika. Do you agree?

Linda : Yes, the texts of Hatha Yoga Pradipika begin with the physical postures of yoga (Asana) and once strength and flexibility of the body are obtained, thus aiding to rid the body of disease, then breathing techniques begin as a way to bring energy to the body and control the mind and thus release stress (physical and mental stress).  From there the Yoga Pradipika can be a guideline to go deeper into Yoga if the participant desires.



9. What is Mudra? can you explain about techniques of the Pranayama :-

Linda : A mudra is like a gesture or a position designed to let energy flow to different areas of the body.  It is said that disease is caused by interruption of the flow of energy to the body.  The most common mudra is touching the thumb and the index finger.  Pranayama is simply breathing and there are many breathing techniques.  For example Alternate Nostril Breathing (Nodhi Sodhana) is done to calm the nervous system while Kapalabahti is invigorating.  These are breathing exercises in additional to Asana practice.  During Asana practice the breath should be full and deep, approximately 6 seconds and used as a way to distract the mind so that you are fully immersed in your Asana practice.  During challenging postures, the breath can be used as a means of drawing energy and during relaxing postures, or stretching, the breath can be used as a means of sinking deeper into the posture. 

10. The Hatha Yoga Pradipika gives us a valuable map to these deeper practices of yoga, as well as providing the knowledge and tools to travel to these depths if we so choose. Is it correct?

Linda : Yes, the Hatha Yoga Pradipika is like a map of yoga which begins with Asana.

11. What are the moral, ethical and societal guidelines for practicing yoga?

Linda : The moral, ethical and societal guidelines for practicing yoga are the “5 Yamas of yoga” which are like rules of behavior:  nonviolence, truthfulness, living without excess gluttony, living without unnecessary possessions and non-stealing.  Striving for a healthier and more peaceful life.
Yes, certainly in 2014 we can all use some guidance to live an honest and ethical life and focus less on material possessions and to treat our bodies with respect.


12. Is yoga helpful for those with Scoliosis?
(Scoliosis, a condition that leads to lateral curvature of the spine, affects 6 million people in the U.S., from infants to the elderly. The most common age of onset is 10-15 years, and 85 percent of cases are idiopathic.)

Linda : For those with Scoliosis, especially adolescents, yoga can especially helpful.  Side Plank done on only 1 side (the side with the curvature) can help to reduce the curvature without surgery.  In severe cases of scoliosis yoga in addition to surgical procedures can be extremely helpful.

உலகம் முழுவதும் ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இந்த காலத்தில், நல்ல விசயங்கள் எங்கு இருந்தாலும், நாடு, இனம், மொழி, மக்கள், மதம் என்ற பேதமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு தம் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும் பக்குவம் நம் மக்களிடையே வேர்விட ஆரம்பித்துவிட்டதற்கு ‘யோகாசனம்’ என்ற நம் நாட்டுச் சித்தர்களின் அரிய கலை, அமெரிக்காவில் பரவி, அமெரிக்க மக்களிடையே பெரும் நம்பிக்கையை வளர்த்திருப்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது.

1 comment: