பவள சங்கரி
இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.
‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். அந்த வகையில் புலவர் கீரன் அவர்களின் துணைவியார் திருமதி செல்ல பாப்பா கீரன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். தற்போது அம்மையார் தம் மகனாருடன் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருக்கிறார். அம்மையாரைத் தொடர்புகொண்டு பேட்டி எடுத்தபோது 75 அகவையைக் கடந்தவரின் நினைவாற்றலும், எழுத்துத் திறனும் ஆச்சரியப்பட வைத்தன. இதோ அம்மையாரிடம் நாம் கேட்டிருந்த வினாக்களுக்கு அவர்கள் அளித்துள்ள விரிவான பதில்கள் அவர்தம் கையெழுத்து வடிவிலேயே காணலாம். புலவர் கீரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல நூல்கலை எழுதிக்கொண்டிருப்பவர். அம்மையார் அவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே படிக்கலாம்.
வினாக்கள்:
1. தங்கள் பெற்றோர் பற்றியும் அவர்கள் தமிழ் ஆர்வம் குறித்தும் கூறுங்கள்
2. இளம் வயதிலேயே தமிழிலும், இலக்கியத்திலும், எழுதாற்றலும், பேச்சார்வமும் ஏற்பட்டதா?
3. ஐயா உயர்திரு புலவர் கீரன் அவர்களுடனான காதல் வாழ்க்கைக்கு உங்கள் இலக்கிய பங்களிப்பு எந்த அளவில் இருந்தது?
4. தங்களுடைய எழுத்துப் பணிகள் பற்றி கூறுங்கள்
5. இலக்கியத்தில் தங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்கள். பிடித்ததற்கான காரணங்கள்
6. மகாபாரதம் மற்றும் வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவற்றில் தாங்கள் கண்ட வேறுபாடுகள்
7. கம்ப இராமாயணம் மற்றும் வால்மீகி இராமாயணம் ஆகியவற்றில் தாங்கள் காணும் வேறுபாடுகள் அல்லது சிலேடைகள் குறித்து கூற முடியுமா?
8. மூன்று தலைமுறைகளைக் கண்ட தங்களுடைய பார்வையில் சமுதாய மாற்றங்களும், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை முறைகளும் எவ்வாறு உள்ளது – மாற்றங்கள் தேவையென்றால் அது எந்த வகையில் வேண்டும்?
9. ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் தமிழில் ஏற்படுத்தியுள்ள எழுத்து மாற்றங்கள் குறித்த தங்கள் கருத்தை அறியத் தாருங்கள்.
10. இளம் தமிழ் ஆர்வலர்களுக்கு தாங்கள் சொல்லும் செய்தி.
11.தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்தும் தமிழ் சரியாக பேச முடியாமலோ அன்றி பேச விரும்பாமலோ இருக்கும் தமிழர்கள் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களின் விடைகள்:
திரு. புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க : http://manoranjitam.wordpress.com/2012/02/25/pulavar-keeran-downloads/
சிறப்பான பதில்கள்...
ReplyDeleteபுலவர் கீரன் அவர்களின் மனைவியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅவர்களின் திறமைகள், படிப்பு வியக்க வைக்கிறது.
தெளிவான ஆணித்த்ரமான அவர்களின் பேட்டி மிக அருமை.
அந்நிய நாட்டில் இருந்தாலும் குழந்தைகளிடம் வீட்டில் தமிழில் பேசினால் தமிழ் மறக்க மாட்டார்கள்.
என்பதை நானும் இவருடன் உடன் படுகிறேன்.
அவர் கையெழுத்து மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி பவளசங்கரி.