Sunday, November 2, 2014

THE IOWA STATE CAPITOL

பவள சங்கரி

நூறாண்டிற்கும் மேலாக ஐயோவா மாநிலத் தலைநகரின் அரசாங்கம் மற்றும் அரசியல் அடையாளச் சின்னமாக விளங்குவது, 275 அடி உயரமுள்ள, 23 கேரட் தங்கத்திலான குவிமாடத்துடனான கட்டிடமே. குவிமாடத்தின் மீதிருக்கும் 250,000 தங்க இலைகள் ஒரு அங்குலம் தடிமனே உடையது. 1871ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு1886இல் தான் முடிவடைந்திருக்கிறது. செங்கல், சுண்ணாம்புக்கல், கிரானைட் மற்றும் மணற்கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து, தெற்காக 363 அடியும், 8 அங்குலமும், கிழக்கிலிருந்து மேற்காக 246 அடி, 11 அங்குலமும் கொண்டதாகும். இடையில் 
1904ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1998இல் துவங்கி, 1999இல் 400,000 டாலர் செலவில் கட்டி முடித்திருக்கிறார்கள். அற்புதமான, ஓவியங்கள், மரச்சிற்பங்கள், சுவர் அலங்காரங்கள், உட்கூரை வண்ணங்கள் கண்ணைப்பறிப்பதாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 



கட்டிடத்தின் உட்புறம் 29 விதமான மார்பிள் மற்றும் பல விதமான மரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. 18 அடி 7 அங்குலம் நீளமும், 1350 பவுண்டு கனமும் உடைய போர்க்கப்பல், U.S.S. IOWA இன் மாதிரியும் வைக்கபட்டுள்ளது. 1000 பவுண்ட் எடையுள்ள பிரமாண்ட மணியும் குறிப்பிடத்தக்கது.


100,000 சட்டம் மற்றும் சட்ட மன்றம் குறித்த புத்தகங்கள் கொண்ட பிரம்மாண்ட நூலகம், வட்ட வடிவான நான்கு அடுக்கு இரும்பு படிகளுடன் அற்புதமாக அமைக்கப்பட்ட சிறிய அறைகள் கண்ணையும், கருத்தையும் கவருபவை!



தேர்தலின்போது இங்கு தரமற்ற, தரக்குறைவான தனிநபர் விமர்சனங்கள் தேர்தலின்போது வைப்பதில்லை. தனிநபரின் திறமைகளும், அவர்கள் சார்ந்த கட்சிகளின் பொருளாதார நிலைப்பாடுகளும், தொழில் மற்றும் தொழில் சார்ந்த சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கும் மேலாக மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்ப்பதற்கு ஏற்ப 60,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் சட்டம் இயற்றியுள்ளனர். சட்டமன்ற நிகழ்வுகளில் மக்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்கும், 
சபாநாயகருக்குச் சரியான இருக்கைகள் (இரு புறமும் ஐந்து இருக்கைகள்) அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 






எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. நவம்பர் 4ம் தேதி வரப்போகிற தேர்தலுக்காக ஒரு கட்சி 2400 தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியிருந்தாலும், அவைகள் யாருக்கும் இலவசமாக வழங்கப்படாமல், பொது மக்கள் சந்திக்கும் இடங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக தேர்தலில் உயர் வழக்கறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள் போன்றவர்களே நிற்க வைக்கப்பட்டு, அவர்களின் திறமைகள் மற்றும் தகுதிகளுமே விளம்பரப்படுத்தப்படுகின்றன. அரசியல் நாகரீகங்கள் சரியாகக் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்கள் எதிர்க்கட்சியில் 
இருப்பவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளைப் பாராட்டத் தயங்குவதில்லை. இப்படியாக ஜனநாயகம் அழகாகப் போற்றப்படுகிறது. மிகத் தெளிவான விவரங்களும், கட்டிடத்தின் அனைத்து இடங்களுக்கும் வழிகாட்டுதலும் அளித்த திருமிகு நான்சிக்கு பாராட்டுதல்கள்.

No comments:

Post a Comment