Sunday, November 23, 2014

Bridgewater Sri Venkateswara Temple - New Jersey



பவள சங்கரி



ஸ்ரீ வெங்கடேசுவரா ஆலயம், மிக அழகாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிற கோவில் . சென்ற இரண்டு பத்தாண்டுகளில் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஆலயம்.




அமெரிக்காவில் வாழ்கின்ற  மக்கள் அனைவருக்கும் மத சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களே, புதிது, புதிதாகவும், கட்டிய கோவில்களை மேலும் பிரம்மாண்டமாக புதுப்பித்துக்கொண்டிருப்பதுமே..  அந்த வகையில் நம்முடைய இந்து கோவில்களின் வளர்ச்சிக்கும் பஞ்சமே இல்லை. டாலர் தேசம் என்பதால் கடவுளர்களும், தங்கம் மற்றும் வெள்ளிக் கவசங்களுடன் ஜெகஜோதியாக அருள்பாலிக்கின்றனர். சென்ற பத்தாண்டுகளில் இருந்த நிலையில் தற்போது பெரும் மாற்றங்களையும் காணமுடிகிறது. நியூ ஜெர்சியில் ஸ்ரீவெங்கடேசுவரா கோவில் மிகவும் பிரபலம். 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’, அந்நிய மண்ணில் நம்ம ஊரு நண்பர்கள், நம்மைச் சந்திப்பதற்காக வரும்பொழுது மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடுகிறோம்.  நண்பர்கள் திரு அமரபாரதி மற்றும் திரு இளமுருகு, மனைவி, மக்களுடன் வந்திருந்தார். விரைவில் ஏனைய மற்ற நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்று நினைக்கிறேன். 


Bridgewater Sri Venkateswara Temple 
Address
1061 Route 202-206
Bridgewater, New Jersey 08807
Phone (908) 725-4477


1 comment: