பவள சங்கரி
1920 இல் தீக்கிறையான மார்க்வாண்ட் தேவாலயத்திற்குப் பதிலாக இரண்டு மில்லியன் டாலர் செலவில் 1928ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேவாலயம் இது. அதிகரித்துவரும் பன்முகக் கலாச்சார பூமியான அமெரிக்காவில் கிருத்துவ மதப் பாரம்பரியம் காக்கப்படவேண்டி, பல்கலைக்கழகத் தலைவர் ஜான் கிரையர் ஹிப்பென் என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதினாலாம் நூற்றாண்டின் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிற வகையில் சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதரீதியான கிருத்துவ சேவை ஞாயிறு காலை 11 மணிக்கும், கோடைக்காலங்களில் மட்டும் 10 மணிக்கும் நடக்கிறது. வருடந்தோறும் பல்கலைக்கழகத்தாரின் இறந்தநாள் நினைவு தினமும் நடத்தப்படுகிறது. 1200 பேர்கள் அமரக்கூடிய இந்த தேவாலயத்தில் திருமணம், பெயர் சூட்டுவிழா, ஞானஸ்தானம், எழுச்சி நாள், இறுதிச் சடங்கு என அனைத்தும் கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமான அறிவிப்புகளுக்காகவும் இங்கு கூடுகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் இறப்பு மற்றும் 9 - 11 சோக நிகழ்ச்சி (இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு) ஆகியவைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தியானத்திற்காக தேவாலயம் திறந்திருக்கிறது. கோடைக்காலத்தில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படுகிறது.
No comments:
Post a Comment