Sunday, November 30, 2014

துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தோழி!

பவள சங்கரி




நெஞ்சம் படபடக்க கண்கள் இருண்டு நாக்கு வறண்டு
ஓ.. பயங்கரம் என் படகு மோதியது பாறையில்
தவிர்க்க முடியாததை ஏற்பதுதானே சாத்தியம்
வெளியேறும் வழியறிந்து மனம் தெளிந்தேன்
அமைதியில் திளைக்க மோனத்தில் ஆழ்ந்தேன்
எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்


என்னை வீழ்த்தியதை எதிர்த்து நின்றேன்
அச்சம் துறந்தேன் துணிவு பெற்றேன்
இடியென முழங்கிய என் அதிரடிக்குரலை
கேட்டீர்களா நீங்கள்! இப்போது இல்லையது
நிமிர்ந்து நின்றேன், துணிந்து முயன்றேன்
கடந்து வந்துவிட்டேன், தயாராகிவிட்டேன்
பார்க்கும் அனைத்தும் இதமாய், பதமாய்
இனிமையாய், உன்னதமாய், உய்த்தது.

ஆம், கூரியப் பார்வையும் பெற்றேன் 
போராடும் குணமும்கூடப் பெற்றேன்
தீயிலும் தாண்டவமாடுவேன்
 கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
மலையோடும் மோதுவேன்
பனியிலும் சிறகு விரிப்பேன்
வெற்றியின் சிகரம் நானென்ற 
உறுமல் கேட்கலாம் நீங்கள்
இன்னும் உரக்க, உரக்க 
சிம்மத்தின் கர்ஜனையாக 
என் உறுமல் கேட்கலாம்
வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கும் 
என் ஆழ்ந்த மூச்சின் ஓசை 
மிதந்து வரலாம் காற்றோடு

வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிகிறேன் இப்போது
தேனீயாய்ச் சேகரித்தேன் - என் இன்ணுணர்வுகளை
 தொட்டேவிட்டேன் சிகரம் - அடிமட்டத்திலிருந்து

வீழ்த்த வீழ்த்த வீழாமல் நிமிர்ந்தேன்
தூசியாய் துயரங்களை ஊதியபடி
உரக்கக் கேட்கும் குரல் என்னுடையதே
இடியென முழங்கும் எம்குரலைக் கேட்டீரோ
பொறுத்ததெல்லாம் போதுமென பொங்குவேனினி

பெற்றேன் வேங்கையின் கூரிய பார்வை 
போராடும் குணமும்கூடப் பெற்றேன்
தீயிலும் தாண்டவமாடுவேன்
கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
மலையோடும் மோதுவேன்
 பனியிலும் சிறகு விரிப்பேன்
வெற்றியின் சிகரம் நானென்ற 
உறுமல் கேட்கலாம் நீங்கள்
இன்னும் உரக்க, உரக்க
 சிம்மத்தின் கர்ஜனையாக 

வெற்றி முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
அச்சம் துறந்தேன் ஆனந்தமாய் அங்குசம் பெற்றேன்

நன்றி  ; வல்லமை

1 comment:

  1. அருமை... இப்படித்தான் இருக்கணும்...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...