பவள சங்கரி
இரண்டு நாட்களாக உறையும் குளிரில் ஓயாத பயணம்.. சிகாகோ மாநிலம் பனி மழையில் நனைய ஆரம்பித்துவிட்டது. -4 டிகிரி செண்டிகிரேட்.
இல்லினாய் மாநிலம் சிகாகோவில் உள்ள அரோரா நகர் ஸ்ரீ வெங்கடேசுவரா ஆலயம் சென்று வந்தோம். திருப்பதி மலைக்கே சென்று வந்தது போல மகிழ்ச்சி. என்றாலும், ஜருகண்டி என்று விரட்ட ஆளில்லாத நிலையில், தமிழ் மணம் கமழும் அழகிய சூழலில் சுகமாக வழிபட முடிந்தது. கோயில் நடத்துபவர்கள் அனைவரும் தமிழர்கள். முருகன்,பிள்ளையார்,மல்லிகார்ஜுனர் (சிவன்),பிரம்மராம்பா (பார்வதி), ஐயப்பன் போன்ற தமிழ் கடவுள்கள் ஆலயங்கள் உள்ளம் நிறைக்கின்றன. முக்கியமான ஒரு விசயம் இங்கு பிரசாதக் கடைகள் முதல் அனைத்துப் பணிகளையும் செய்யக் கூடிய தன்னார்வலர்கள் மிகப் பெரும் பணியில் இருப்பவர்கள். மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று சிந்திப்பவர்கள். வாழ்த்துகள் நண்பர்களே.
No comments:
Post a Comment