Sunday, October 6, 2013

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!


பவள சங்கரி



வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!


கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையே
கோளாறு நீங்கவே  சோதியானவளே வாரணாம்பிகையே
கோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையே
திருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே

ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையே
பனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
கனியின்ரசமாய் கார்முகில் வண்ணமாய் வந்துதித்த வாரணாம்பிகையே
சரணம் உனை அடைந்திட்டேன் சடுதியில் வாருமம்மா வாரணாம்பிகையே!

படத்திற்கு நன்றி:


2 comments:

  1. வாரணாம்பிகையே சரணம் அம்மா...

    ReplyDelete
  2. சிறிய அழகான பிரார்த்தனைப்பாடலை பகிர்ந்துள்ளதற்கு நன்றிகள்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...