விதையின் அழிவு துளிர்
துளிரின் அழிவு மரம்
மரத்தின் அழிவு கன்று
கன்றின் அழிவு பூ
பூவின் அழிவு காய்
காயின் அழிவு கனி
கனியின் அழிவு விதை................
அன்பின் அழிவு துன்பம்
துன்பத்தின் அழிவு இன்பம்
இன்பத்தின் அழிவு சோகம்
சோகத்தின் அழிவு அன்பு................
வெற்றியின் அழிவு தோல்வி
தோல்வியின் அழிவு நம்பிக்கை
நம்பிக்கையின் அழிவு அவநம்பிக்கை
அவநம்பிக்கையின் அழிவு வெற்றி.............
இயற்கையின் அழிவு செயற்கை
செயற்கையின் அழிவு உண்மை
உண்மையின் அழிவு பொய்மை
பொய்மையின் அழிவு இயற்கை..............
நிம்மதியின் அழிவு [மன]அழுத்தம்
அழுத்தத்தின் அழிவு அன்பு
அன்பின் அழிவு தனிமை
தனிமையின் அழிவு தோழமை
தோழமையின் அழிவு துயரம்
துயரத்தின் அழிவு நிம்மதி.................
நல்லாருக்குங்க
ReplyDeleteநன்றிங்க சார்.
ReplyDeleteம்ம்ம்ம்......
ReplyDeleteநன்றி ஆரூரன்.
ReplyDeleteஎன் நேரத்தின் அழிவு... இந்த அருமையான கவிதை, படிச்சதை சொன்னேங்க... நல்ல கவிதை
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteஉங்கள் பொன்னான நேரத்தின் அழிவு , ஆக்கத்திற்கான ஊக்கம்..........நன்றி திரு.ஆதித்தகரிகாலன்....
ReplyDeleteநன்றிங்க T.V.R.
ReplyDelete