Monday, September 6, 2010

கானல் நீர்.........


பட்டாடையின் பளபளப்பும், வைர அட்டிகையின் மினு மினுப்பும்
ஒட்டு முடியுடன் நீண்ட சடையலங்காரமும்,
ஆடைக்கேற்ற செயற்கை வண்ணம் பூசிய அழகிய மலர்கள்.

தன் பெருமையை பறைசாற்ற அலங்காரப் பதுமையைத் தாங்கி வரும் கதராடை கனவான்கள் - கணவன்மார்கள்,
சொந்தங்கள் கூடிக் குலவும் வெட்ட வெளியில்,
மெய்மறந்து கண்களால் காதல் மொழி பேசும்
பெற்றோரால் பரிந்துரைக்கப் பட்ட இணைகள்................

புதிய அணிகலனை அலசி ஆராயும் அதி மேதாவிகள்
போலி மினு மினுப்பு வெட்ட வெளிச்சமாகி விடுமோ
என்ற அச்சத்தில் நொடிக்கொரு முறை
அசலுடன் உரசிப் பார்க்கும் அறியாமை.........
நொந்து போன சூழலைச் சீராக்க,
நாடிப்போன, நைந்து போன சொந்தங்கள்- சுற்றங்கள்,
உண்டாயா, உறங்கினாயா? என்கிற போலி விசாரிப்புகள்........
சொந்தமும், பந்தமும் சபையில் சம்பந்தம் பண்ணும் சடங்குகள்........

போலி மனம் சுமந்த பந்தத்தைப் பார்த்து,
போலி நகை சுமந்த நங்கையின் ஏக்கம்,
அந்த நொந்த நொடியின் வெந்த மனதின்
பாராமுகத்தின் வேதனையின் தாக்கம்
கனத்த இதயத்தின் ரணம்.........
அமிலமே அமுதாகிப் போன அநியாயம்.......

பூவும், பொட்டும், பட்டும் துறந்து,
பரந்த மனதுடன் அழகிய ரோசா மாலையுடன்,
சிவ புராணமும், நீத்தார் விண்ணப்பமும் பாடி,
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அன்பு [?] நெஞ்சங்கள்!

உயிர் நீர் ஊற்றாத உற்றாரின் பன்னீர் மணம் மறையுமுன்னே,
அடுத்துப் போக வேண்டிய திருமணத்திற்கு,
அங்கேயே திட்டமிடும் நல்ல உள்ளங்கள்.........
இவைதான் அன்பான சொந்த...........பந்தங்கள்................

15 comments:

  1. ம்ம்ம்.....நிதர்சனங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீரகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இறுக்கமான எண்ணங்கள்.. பூ வைக்கும் இடத்தில் பொன் வைத்தால் இப்படித்தானோ?

    ReplyDelete
  3. உயிர் நீர் ஊற்றாத உற்றாரின் பன்னீர் மணம் மறையுமுன்னே,
    அடுத்துப் போக வேண்டிய திருமணத்திற்கு,
    அங்கேயே திட்டமிடும் நல்ல உள்ளங்கள்.........
    இவைதான் அன்பான சொந்த...........பந்தங்கள்................

    ......வீட்டு நடப்புகளை..... உறவுகளின் நிலையை அருமையாக சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  4. ஆமாங்க சித்ரா, சில விடயங்கள் க்ண்ணெதிரே நடக்கும் போது நம்மால் இப்படி புலம்ப மட்டும் தான் முடிகிறது.........என்ன செய்ய.... நன்றிம்மா......

    ReplyDelete
  5. நன்றிங்க நண்டு நொரண்டு.....அடிக்கடி வாங்க சார்.....

    ReplyDelete
  6. ஆமாம் சார் நல்லா சொன்னீங்க...... பவுன் விக்கிற விலைக்கு இன்னைக்கு பல பெண்களால ஏக்கத்த மட்டும்தானே அணிய முடியும்.......நன்றிங்க அப்பாதுரை சார்......

    ReplyDelete
  7. படமும் அருமை!

    பெற்றோரால் பரிந்துரைக்கப் பட்ட இணைகள்.......
    மொத்த அவலமும் ஒரு வரியில்!

    ReplyDelete
  8. அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete
  10. சிலசமயங்களில் வாழ்வியலை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நித்திலம்.வாழ்வு யதார்த்தம்தான் !

    ReplyDelete
  11. ஆமாங்க.........நன்றி ஹேமா.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...