Monday, March 18, 2013

வாழ்வின் இனிய தருணம்!



அன்பு நண்பர்களே,

வணக்கம்.  பல நேரங்களில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் சரியா, அல்லது நாம் போகும் பாதைதான் சரியா என்ற எந்தவிதமான சிந்த்னையும் இல்லாமலே ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் நீ போவது சரியான பாதைதான் என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது உள்ளம் குளிரத்தான் செய்கிறது. அதுவும் நல்ல நட்புகள் மனதார வாழ்த்தும் போது மகிழ்ச்சி பொங்கத்தான் செய்கிறது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உள்ளம் பரபரக்கிறது. எல்லாம் இறைவன் செயல் அல்லவா?

என் இனிய தோழி , தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அப்படி எனக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரததின் தருணத்தில் உடன் இருந்து என்னை மகிழ்ச்சியுறச் செய்ததோடு அதனை அழகாக குழுமத்தில் வெளியிட்டதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மிகச் சிறந்த மனிதாபிமானி. பெண்கள் முன்னேற்றத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். தம்முடைய இடைவிடாத பணிகளுக்கிடையேயும் இந்த  நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டு தில்லியிலிருந்து வந்த களைப்பு தீருமுன் பறந்து வந்து நிகழ்சியில் கலந்து கொண்டதாக தலைவரும், நிகழ்ச்சி அமைப்பாளரும், ஈரோடு பசுமை இயக்கத் தலைவருமான திரு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் கூறியது நெகிழ்ச்சியான விசயமாக இருந்தது.



1.சிறந்த பேராசிரியையாக  கொங்கு அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியை எஸ். லீலா
2. கே. சாந்தா கோபிநாத் - சமூக சேவை

3. எஸ். பிரதீபா சுதாகர் - மருத்துவம்

4. ஆர். அபிநயா ரமேஷ் - விளையாட்டு

5. வி. சுப்புலட்சுமி - பள்ளிக் கல்வி

6. ஜி.எஸ்.தமிழ்பிரியா - இளம் தொழில் அதிபர்

இவர்களும் விருது பெற்றவர்கள்.


தமிழகத்தில் இருந்த போது திடீர் திடீரென சில எதிர்பாராத நல்ல நிகழ்வுகள்  அவ்வப்போது நிகழ்வதும் அதில் நான் கலந்து கொள்வதற்கு வாய்ப்பமைவதுமாக நிகழ்ந்தது.

அந்த வகையில் ஈரோட்டில் நான் இருந்த நாட்களில் ஒரு நாள் திடீரென ஆறு ஈரோடு இயக்கங்கள் ஒன்றிணைந்து ஈரோட்டில்லேயே வாழ்ந்து அந்த  மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்த பெண்களைச் சிறப்பு செய்யும் ஒரு நிகழ்ச்சி 10ம் திகதி நடைபெற்றது.
 

வானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் அவர்கள் உலக்க் கவிதைகளை வாசிக்க இந்த நிகழ்வு இனிதான ஒரு இலக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. சிறப்பு விருந்தினராக திருமதி சுப்புலக்‌ஷ்மி ஜெகதீசன் வந்திருந்தார்கள்.

தத்தம் துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் இலக்கியத்திற்கு பவளசங்கரி அவர்கள் தேர்வாகியிருந்தார். இந்த வருடம் 4 நூற்களை வெளியிட்டு சாதனை படைததவர் என்பதோடு வல்லமை மின்னிதழை மிகத்தரமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார் என்பதுவும் ஒரு கூடுதல் பெருமையல்லவா? இது மட்டுமல்லாது இவ்வருடத் தொடக்கம் பவளசங்கரி த.ம.அ வின் செயலவையில் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் என்னும் பதவியையும் வகிக்க ஆரம்பித்துள்ளார்.

பெண்களின் சக்தி அளப்பறியது. அதனை சிறப்புற வெளிக்காட்டி நற்பணிகள் ஆற்றிவரும் பவளாவிற்கு இந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர் வாழும் ஊரிலேயே அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இன்னிகழ்வு நடந்திருப்பது நம் அனைவரும் பெருமப்பட வேண்டிய ஒரு விஷயமல்லவா? பவளசங்கரியின் பணிகள் தொடர்ந்து மானுட மேண்மைக்கு வளம் சேர்க்க இறையருள் வேண்டி வாழ்த்துகிறேன்.

சுபா


மகிழ்வான சேதி. பவளத்திற்கு வாழ்த்துக்கள்! சகோதரி நிிதா பாரதியாருக்கு நினைவுறுத்துவதாக ஒரு சேதி வரும். இந்திய வளமையின் ச்மபங்காக இருக்கும் பெண்களுக்கு சம வாய்ப்பளிக்கவில்லையெனில் இந்தியா எப்படி முன்னேறுமென்று? உலகில் எங்கும் காணாத வண்ணம் இந்தியப் பெண்மை இடர்களுக்கு நடுவில் ஜொலிக்கிறது. அதில் பவளமும் ஒன்று. பண்பாட்டின் வேர்கள் பெண்களிடமே உள்ளது. பெண்மை வாழ்ந்தால் தமிழ்ப் பண்பாடு வாழும். மிக்க மகிழ்ச்சி.

நா.கண்ணன் (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை)


அன்புத்தோழி ஷைலஜாவின் வாழ்த்து!

மிக்க மகிழ்ச்சி பவழம்  பெருமையாக இருக்கிறது  உங்களை நினைக்கும்போது  பவழத்தை  தங்கக்கயிற்றில்  கோத்து இருக்கிறார்கள் என்னும் பெருமை! மரகதப்பச்சை வண்ண பராசக்தியின் பெயரைக்கடைசியில்  கொண்டவரே! மெல்லிய நீலமும்வாடாமல்லி  நிறமுமான சால்வையில்  வைரம்போல  மின்னுகிறீர்கள்! முத்தான  சிரிப்பு! பெண்ரத்தினம் அல்லவா  நீங்கள்!  மாணிக்க மகுடமாய்  இன்னும் பல பெருமைகள்  உங்களைச்சேரட்டும்! கோமேதகமே குளிர்வான் நிலவே என நான் பின்னர் புஷ்பராகக்கவிதை  பாடட்டும்!

(நவரத்தினத்தில் ஒன்று அதிகமாகிவிட்டதே  தசரத்தினமா?:)  எங்க தவறு  யாராவது சொல்லுங்க?:)
KRA NARASIAH SIR
 
GREAT Congrats Pavala!
N
அன்புச் சகோதரர் பழமைபேசியின் வாழ்த்து!
 ஈரோடு இயம்பியது கவிதை
செவி கொண்டது உலகு
இனபம் உற்றது தமிழ்
வல்லமையின் வல்லமையே
வணக்கமும் வாழ்த்தும்!!



மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ள பேரா. நாகராசன் சார், நா. கணேசன் சார், கீதாஜி, துரை தம்பி, ஜீவ்ஸ், சாந்தி, தமிழ்த்தேனீ சார், சொ.வி. ஐயா., எஸ்.கே. ஐயா, மாதவன் இளங்கோ, ஜோ, ஸ்வர்ணா, இரத்தினம் சிதம்பரம் ஐயா, ஆகிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

அன்புடன்

பவளா




8 comments:

  1. வாழ்த்துக்கள்...

    முடிவில் எழுத்துக்கள் (Font) மாறி உள்ளது...

    ReplyDelete
  2. அன்பின் திரு தனபாலன்,

    மிக்க நன்றிங்க. எனக்கு சரியாக இருக்கிறதே.. எந்த எழுத்துக்கள் மாறியுள்ளது?

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  3. மிகவும் சந்தோஷம். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு வை. கோ சார்,

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  4. இந்த இனிய தருணம் என்றும் மலர என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள் அம்மா !..(சகோதரர் தனபாலன் சொன்னதுபோல்
    மாறியுள்ள பகுதி இவைகள் தான்//

    //அன்புச் சகோதரர் பழமைபேசியின் வாழ்த்து!
    மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ள பேரா. நாகராசன் சார், நா. கணேசன் சார், கீதாஜி, துரை தம்பி, ஜீவ்ஸ், சாந்தி, தமிழ்த்தேனீ சார், சொ.வி. ஐயா., எஸ்.கே. ஐயா, மாதவன் இளங்கோ, ஜோ, ஸ்வர்ணா, இரத்தினம் சிதம்பரம் ஐயா, ஆகிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    அன்புடன்
    பவளா //

    ReplyDelete
    Replies
    1. அன்பினிய அம்பாளடியாள்,

      தங்களுடைய வாழ்த்திற்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும் அம்மா. தாங்கள் கூறியுள்ளதுபோல இறுதிப் பகுதியை மீண்டும் மாற்றியுள்ளேன். நன்றி.

      அன்புடன்
      பவளா

      Delete
  5. இனிய வாழ்த்துகள் சங்கரி,.. இன்னும் நிறைய விருதுகள் உங்களைத்தேடி வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சாந்தி,

      தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete