Tuesday, December 7, 2010

வாங்க..வாங்க......பழகலாம்.......

வலைப்பதிவர்கள் சங்கமம் - 2010.

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறோம்..........
அனைவரும் தங்கள் நண்பர்கள் புடைசூழ, வருக, வருக என வரவேற்கிறோம்.
காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என செவிக்குணவுடன், வயிற்றுக்கும் ஈய்ந்து, எங்கள் கொங்கு மண்ணிற்கேயுரிய அன்பான உபசரிப்புடன், தங்களை உள்ளம் குளிரச் செய்யக் காத்திருக்கிறோம், நண்பர்களே...........
கட்டாயம் வாருங்கள்....பழகலாம்......தோழர்களே.....
எங்கள் படைத் தளபதிகளின் தொடர்பு எண்கள் கொண்டு, தங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் நண்பர்களே.........
முன்கூட்டியே தங்கள் வருகையை தெரியப்படுத்துவதன் மூலம் விழாவை மேலும் சிறக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் தொடர்புக்காகக் காத்திருக்கிறோம்......
டிசம்பர் 26ம் நாளை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுமாறு, நாம் இவ்விழாவைச் சிறப்பாக நடத்த தங்களனைவரின் முழு ஆதரவையும் எதிர்நோக்கி இருக்கிறோம். வாருங்கள் தோழர்களே..........
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!
.
கதிர் 99653-90054
பாலாசி 90037-05598 கார்த்திக் 97881-33555
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540 ராஜாஜெய்சிங் 95785-88925 சங்கமேஸ் 98429-10707
ஜாபர் 98658-39393
நண்டு நொரண்டு 94861-35426




9 comments:

  1. சங்கமம் சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சந்திப்பு சிறப்பாக நடக்க என் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லாரும் சந்திக்கபோறீங்களா?

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக நடத்துவோம்!

    ReplyDelete
  6. பயணப் படி மற்றும் பஞ்சப் படி கிடைக்குமா ?

    ReplyDelete
  7. சூப்பர் டைட்டில் நித்திம்மா.. =)))))

    ReplyDelete
  8. சந்திப்பு பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஈரோடு பதிவர் சங்க கூட்டம்
    சிறப்பாக நடந்திட வாழ்த்துக்கள்....!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...