பவள சங்கரி
கைவண்ண ஓவியம் : நர்மதா
சிற்பி வடித்த செம்மலரின் நித்தியச் சிரிப்பு
சிப்பி மூடிய சிதிலமிலா சிங்காரச் சிரிப்பு
சிந்தும் ஒளியால் சிந்தனை கலங்காதச் சிரிப்பு
சிங்கம் கர்ஜித்தாலும் சினம் அறியாச் சிரிப்பு!
கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்றெவரோ
சொல்லிச்சென்றது இன்று காமுகர்களுக்குப் பாடமானது
கல்வியும் ஞானமும் கலவியில் கலாச்சாரக் குப்பையாகிறது
சொல்லியும் கூடியும் களித்திருக்கக் கபட நாடகமாகிறது.
நல்லதொரு வீணையை நலங்கெடப் புழுதியில் எறியும்
வல்லதொரு மானிடரை சிவசக்தி சினம் கொள்ளாளோ?
சொல்லிலொரு சுவையைத் தந்தவள் கபடமாயமதை
என்னிலொரு தீபமேற்றியே உணரச் செய்தவள்!!
சம்பிரதாயமும் சகோதரத்துவமும் அவநம்பிக்கையாகிக் கெட்டது
வம்புவாதமும் நட்பினிலக்கணமும் சுவடில்லாமல் போனது
சீலமும்சிவமும் இணையிலாநாதமும் சீவனாயென்றும் ஒலிக்கும்
மோனத்தவமும் ஞானஒளியும் நலமாயென்றும் சித்திக்கும்!!!
நித்திய சிரிப்பு
ReplyDeleteநிலவும் அருமையான வருகள்..
வரிகள் என வரவேண்டும்.. எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்..
ReplyDelete