Thursday, December 31, 2020
Wednesday, December 30, 2020
Monday, December 21, 2020
புற்று நோய் சிகிச்சையில் தேனீயின் நஞ்சு .....
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேன் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்பட்டு, நம் தமிழ், சித்த மருத்துவத்திலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தேனீக்களின் கொடுக்கில் உள்ள நஞ்சு மார்பகப் புற்று நோய்க்கு சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர். தேனீயின் கொடுக்கில் வலி உணர்வை உண்டாக்கும் மூலக்கூறுதான் மெலிட்டின் என்பது. இது மிக மோசமான இரண்டு வகை மார்பகப் புற்றுநோயின் உயிரணு சவ்வுகளை 60 நிமிடங்களுக்குள் முற்றிலுமாக அழிக்கவல்லதாம்! மெலனோமா, நுரையீரல், கருப்பை, கணையம் போன்ற அனைத்து புற்றுநோய், டியூமர் கட்டிகளை முற்றிலுமாக அழிக்கக்கூடியதாம்… இயற்கை மனிதனின் வரம். இயற்கை வளங்களைக் காப்பது நம் கடமை.
https://www.medicalnewstoday.com/articles/honeybee-venom-kills-aggressive-breast-cancer-cells?utm_source=Sailthru%20Email&utm_medium=Email&utm_campaign=dedicated&utm_content=2020-12-20&apid=35428543
Sunday, December 20, 2020
Thursday, December 10, 2020
Thursday, December 3, 2020
Monday, November 30, 2020
Friday, November 20, 2020
Tuesday, November 17, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கு கவுணி அரிசி
“கருப்பு கவுணி அரிசி”. - அதிக சத்துக்களும் (Nutrients), (Anti-oxidant) நிறைந்தது. மன்னர்களின் காலத்தில்
இந்த கவுனி அரிசியை அரசர்களும், மந்திரிகளும்
மட்டுமே பயன்படுத்துவர்களாம், மக்கள் யாராவது கருப்பு
அரிசியை பயன்படுத்தினால் தண்டிக்கப் படுவார்களாம் .நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி,
பழுப்பு அரிசி ரகங்களைவிட இந்த கவுணி அரிசி அதிக சத்துகள் நிறைந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மற்ற அரிசி வகைகளைவிட
மிகக் குறைந்த அளவே கவுணி அரிசி பயிரிடப்படுகிறது. அண்மைக்காலமாக
இந்த அரிசியை அமெரிக்கா, ஆசுத்திரேலியா, ஐரோப்பிய நாடுகளும் பரவலாகப் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளன.
இதன் கருப்பு நிறத்துக்கு காரணமாக இருக்கும்
‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி, இதயம், மூளை, இரத்தக்குழாய்களின் செயல்பாடுகளையும் பொதுவான
ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. திராட்சை
வகைகள், கத்தரிக்காய், ஊதா
முட்டைக்கோஸ், மாதுளை, கருப்பு பீன்ஸ்
போன்றவற்றில் இதே ‘ஆன்தோசயானின்’ நிறமி
நிறைந்துள்ளது. மற்ற அரிசி வகைகளில் உள்ளதைவிட கவுணி அரிசியில் சற்று குறைவான
மாவுச்சத்தும், அதிகமான புரதமும், இரும்புச் சத்தும் உள்ளன. வைட்டமின் பி & இ
உள்ளதால் கண்களுக்கும், சரும
ஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதோடு
நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் நீரிழிவு, புற்றுநோய், இதய
நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றுகிறது. கவுணி
அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை
உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வாயு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற
பிரச்சினைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
இரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தி, இரத்த நாளங்கள் முதிர்ச்சி
அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைக் காக்கிறது.
மிகுந்த மருத்துவ
குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி
வந்தார்களாம். ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து
மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியை பயன்படுத்த
தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில்
தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்.
Friday, November 13, 2020
தீபாவளி வாழ்த்துகள்!
நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள் Disease
Control and Prevention (CDC) சமீபத்தில் மாஸ்க் என்ற முகமூடிகளின் பயன்பாடு குறித்த அறிக்கையை புதுப்பித்துள்ளது. கொரோனா வைரசு நோய்த்தொற்றுடையவர் வைரசு
நிறைந்த நீர்த்துளிகளை வெளியேற்றுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களால்
நோய்த்தொற்று நீர்த்துளிகள் உள்ளிழுக்கப்படுவதைக் குறைக்கின்றன என்று கூறுகிறது. பல நாடுகள் பொது இடங்களில் துணியாலான
முகம் உறைகளை அணிய பரிந்துரைக்கின்றன, குறிப்பாக கூட்டம்
அதிகமாக உள்ள இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமாம். தொற்றுநோயால்
பாதிக்கப்பட்ட ஒருவர் சுவாசிக்கும்போது, இருமல் அல்லது
தும்மும்போது வைரசுடன் நீர்த்துளிகள் காற்றில் நுழைவதைத்
தடுப்பதன் மூலம் கொரோனா வைரசு பரவலை இந்த முகமூடிகள்
குறைக்கின்றன. முக்கியமாக, வைரஸ் உள்ளவர்களாக இருந்தும், எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் அல்லது இதுவரை அறிகுறிகளைக் காட்டத்
தொடங்காதவர்கள் விசயத்தில் முகமூடி
மிகவும் முக்கியமானது. இந்த வைரசு இதுவரை 52.1 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களையும் 1.2
மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, உருசியாவின் இசுபூட்னிக் வி கோவிட்
-19 தடுப்பூசியின் முதல் கட்ட 3 சோதனை 92% செயல்திறனைக் காட்டியுள்ளதாக அறிவித்தது மகிழ்ச்சியான
செய்தி. விரைவில் இது புழக்கத்திற்கு வரும் என்று நம்புவோம் என்றாலும், சான்றுகள் முகமூடிகள் அணிந்தவரை நோயிலிருந்து
பாதுகாப்பு உறுதி என்பதைக் காட்டுகிறது. தீபாவளியை பாதுகாப்புடன்
கொண்டாடி மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பர்களே.
Thursday, November 12, 2020
Tuesday, November 10, 2020
Thursday, November 5, 2020
இதயம் பேசும் சொற்கள் .....
மனிதர்கள்
உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பொய்யும், நடிப்புமான வார்த்தைகளை உதிர்த்தாலும் உயிர்
பிரியும் நேரத்தில் கட்டாயம் உண்மையைத் தான் பேசுவார்கள் .. அவை இதயம் பேசும் சொற்கள்
.. நாம் இறுதியாக என்ன வார்த்தை பேசப்போகிறோம்
என்று யாருக்குமே தெரியாது .. ஆனாலும் எல்லா
பாவங்களையும் செய்தாலும் தான் நல்லவராக எண்ணிக்கொள்வதே மனித மனம் .. என்றாலும் இயற்கையின்
கணக்கிலிருந்து தப்ப முடியாதே ..சில பிரபலங்கள் உயிர் விடுவதற்கு முன்னர் இறுதியாக
உதிர்த்த வார்த்தைகள் இதோ …
ஜூலியசு
சீசர் – துரோகம் செய்த நண்பனைப் பார்த்து ‘யூ டூ புரூடஸ்?’ என்றார்
பெருந்தலைவர் காமராஜர் – தமது உதவியாளரிடம், ”வைரவா
விளக்கை அனைத்து விடு”
தாமஸ் ஆல்வா எடிசன் - “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி
பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டும்”.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோ - “இறைவா … நான் ஒரு
குற்றமும் செய்யாதவன்”.
உலக அழகி டயானா - “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”
கிளியோபாட்ரா - தனது கையில் பூ நாகத்தை பிடித்துக் கொண்டு, “ஆஹா… இதோ… என் முடிவு இங் கே
இருக்கிறது” என்றார்.
பீத்தோவன்
- “நண்பர்களே கை தட்டுங்கள் … இந்த
நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப் போகிறது”
மேரி க்யூரி - “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”
பாபர் - ”இந்தியாவி ல் உள்ள இந்துக்களை
துன்புறுத்தாதே”
வின்ஸ்டன் சர்ச்சில் – 9 நாட்கள் கோமாவில் இருந்து உயிர் விட்டவர்,
கோமாவிற்கு செல்லும் முன் இறுதியாகச் சொன்னது, “எனக்கு எல்லாமே போர்
அடிக்குது”
Saturday, October 24, 2020
Tuesday, October 13, 2020
காலக்குறள்
பேரிடர் காலத்தின் கொள்கை
முடிவுகளும் குழப்பமான
தொற்றாகி தொல்லை கொடுக்கும்.
#காலக்குறள்19 - பவளா
முகக்கவசமிடும் காலமானாலும்
பிரபலங்களின் உள்முகத்தை
வெளிச்சமிடும் உன்னத
காலம்.
#காலக்குறள்21 - பவளா
தற்காப்பு,
தன்னம்பிக்கையால் நெய்த துணிவெனும் முகக்கவசத்துடன் வாகைசூடி வாழும்
வசந்த காலம்.
#காலக்குறள்20 - பவளா
Friday, October 9, 2020
Thursday, October 8, 2020
Sunday, October 4, 2020
Friday, September 25, 2020
Sunday, September 20, 2020
Friday, September 18, 2020
Tuesday, September 15, 2020
Thursday, September 10, 2020
Tuesday, September 8, 2020
Saturday, September 5, 2020
Wednesday, September 2, 2020
Tuesday, September 1, 2020
Wednesday, August 26, 2020
Thursday, August 20, 2020
Tuesday, August 18, 2020
Saturday, August 15, 2020
Thursday, August 13, 2020
Monday, August 10, 2020
Friday, August 7, 2020
Friday, July 31, 2020
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...