Tuesday, November 8, 2016
Saturday, November 5, 2016
நெருஞ்சி முள்
கணிப்பொறியில் சிக்குண்ட
கனிசமான பொழுதுகளில்
அம்மாவிடமும் இயந்திரத்தனமான
உரையாடல்கள்.
இடப்புற ஊக்கு வலப்புறமும்
வலப்புற வளையம் இடப்புறமும்
இடமாறியிருந்த அம்மாவின்
இரவிக்கையை முதலுங்கடைசியுமாய்
கண்டது இறுதிக் குளிப்பாட்டலில்தான்.
பிடிமானம் அற்றுப்போன இயந்திரத்தனம்
காலமெலாம் நெஞ்சின் நெருஞ்சியாய் .....
Thursday, November 3, 2016
நீளும் பயணம்!
உம் இதய இச்சையின் உச்சம்
நோக்கிய உயர்வில் இன்னொருவர்
நீ கொள்ளையடித்த பணப்பையைக்
களவாடி அதன்மீது மெழுகுக்
கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
இரக்கம் காட்டுங்கள்! பாவம்
அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!
நோக்கிய உயர்வில் இன்னொருவர்
நீ கொள்ளையடித்த பணப்பையைக்
களவாடி அதன்மீது மெழுகுக்
கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
இரக்கம் காட்டுங்கள்! பாவம்
அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!
கலீல் கிப்ரான் / மொழிபெயர்ப்பு
Friday, October 28, 2016
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!!
தீபவொளியின் திருமுகம் இதமாய் சுடர்க
தீந்தமிழின் நலம் யாவும் சூழ்க
வான்நிலவின் ஒளிர் முகம் மலர்க
தேன்கனியின் நறுமுகை நலம் பகிர்க
தானெனும் மாயை விலகி ஒளிர்க
வீணெனும் விகல்பம் நீங்கி நிமிர்க
வாழ்வெனும் வசந்தம் பரவி மகிழ்க
தாழ்வெனும் எண்ணம் நிலையா தொழிக
வரமும் நலமும் நித்தம் தொடரும்
இகமும் பரமும் நன்மை நிலைக்கும்
தேவியவள் நேசம் கனிந்து பெருகும்
கருணை பொழில் வாணியின் அருளும்
எங்கும் நிறைந்து அறிவொளி படரும்
பொங்கும் செல்வம் தங்கும் என்றும்
ஒளிரும் மங்கலம் விலகும் இருளும்
மலரும் இன்பம் வையகம் முழுதும்!!
Tuesday, October 25, 2016
Saturday, October 22, 2016
தாய் மொழி!
உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு 45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!
Wednesday, October 19, 2016
தேசிய தமிழ் காவலர்!
பவள சங்கரி
சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.
நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.
மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...