Thursday, November 5, 2020
இதயம் பேசும் சொற்கள் .....
மனிதர்கள்
உயிரோடு இருக்கும்போது எத்தனையோ பொய்யும், நடிப்புமான வார்த்தைகளை உதிர்த்தாலும் உயிர்
பிரியும் நேரத்தில் கட்டாயம் உண்மையைத் தான் பேசுவார்கள் .. அவை இதயம் பேசும் சொற்கள்
.. நாம் இறுதியாக என்ன வார்த்தை பேசப்போகிறோம்
என்று யாருக்குமே தெரியாது .. ஆனாலும் எல்லா
பாவங்களையும் செய்தாலும் தான் நல்லவராக எண்ணிக்கொள்வதே மனித மனம் .. என்றாலும் இயற்கையின்
கணக்கிலிருந்து தப்ப முடியாதே ..சில பிரபலங்கள் உயிர் விடுவதற்கு முன்னர் இறுதியாக
உதிர்த்த வார்த்தைகள் இதோ …
ஜூலியசு
சீசர் – துரோகம் செய்த நண்பனைப் பார்த்து ‘யூ டூ புரூடஸ்?’ என்றார்
பெருந்தலைவர் காமராஜர் – தமது உதவியாளரிடம், ”வைரவா
விளக்கை அனைத்து விடு”
தாமஸ் ஆல்வா எடிசன் - “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி
பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டும்”.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோ - “இறைவா … நான் ஒரு
குற்றமும் செய்யாதவன்”.
உலக அழகி டயானா - “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”
கிளியோபாட்ரா - தனது கையில் பூ நாகத்தை பிடித்துக் கொண்டு, “ஆஹா… இதோ… என் முடிவு இங் கே
இருக்கிறது” என்றார்.
பீத்தோவன்
- “நண்பர்களே கை தட்டுங்கள் … இந்த
நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப் போகிறது”
மேரி க்யூரி - “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”
பாபர் - ”இந்தியாவி ல் உள்ள இந்துக்களை
துன்புறுத்தாதே”
வின்ஸ்டன் சர்ச்சில் – 9 நாட்கள் கோமாவில் இருந்து உயிர் விட்டவர்,
கோமாவிற்கு செல்லும் முன் இறுதியாகச் சொன்னது, “எனக்கு எல்லாமே போர்
அடிக்குது”
Saturday, October 24, 2020
Tuesday, October 13, 2020
காலக்குறள்
பேரிடர் காலத்தின் கொள்கை
முடிவுகளும் குழப்பமான
தொற்றாகி தொல்லை கொடுக்கும்.
#காலக்குறள்19 - பவளா
முகக்கவசமிடும் காலமானாலும்
பிரபலங்களின் உள்முகத்தை
வெளிச்சமிடும் உன்னத
காலம்.
#காலக்குறள்21 - பவளா
தற்காப்பு,
தன்னம்பிக்கையால் நெய்த துணிவெனும் முகக்கவசத்துடன் வாகைசூடி வாழும்
வசந்த காலம்.
#காலக்குறள்20 - பவளா
Friday, October 9, 2020
Thursday, October 8, 2020
Sunday, October 4, 2020
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...