
 துன்பத்தை இன்பமாக்கும்
   அறிவாளியை மூடனாக்கும்
 கோழையை வீரனாக்கும்
   வீரனைக் கோழையாக்கும்
 ஆசையை அடக்கச் செய்யும்
    தேவையை மறுக்கச் செய்யும்
 இருளுக்கு ஒளி சேர்க்கும்
    ஒளியை மூடி மறைக்கும்
 தனிமைக்குத் தீனி போடும்
    தனிமையை பிடுங்கித் தின்னும்
 அன்புக்கு உறவாகும்
    உறவுக்குப் பாலமாகும்
 துயருக்கு மருந்தாகும்
    கூட்டுக் குடும்பத்தின் 
  ஆணி வேராகும்....
      இதயத்தின் பலமாகும்
   இதயத்தின் பிணியுமாகும் - பாசம்
தனிமைக்குத் தீனி போடும்
ReplyDeleteதனிமையை பிடுங்கித் தின்னும்
....பாசம் ...... சூப்பர் கவிதைங்க!!! அசத்தலா பாசத்தின் effects பற்றி எழுதி இருக்கீங்க.
பாசம் இல்லைன்னா எதுவுமே எதுவும் ஆகாதுங்களே... சுழலும் உலகமே இந்த போர்வைக்குள்ளதானே சுருண்டிருக்கு...
ReplyDeleteநல்ல கவிதைங்க...
கவுஜையை மூச்சி விடாம படிச்சா இதயம் நின்னுபோகும்
ReplyDeleteநன்றி சித்ரா.பாசம் தானே நம்மையெல்லாம் கட்டி வைத்திருக்கிறது......
ReplyDeleteநல்லா சொன்னீங்க பாலாசி..... நன்றிங்க.
ReplyDeleteகவுஜையின்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றிங்க நசரேயன்.......
ReplyDeleteநல்லாருக்கு..
ReplyDeleteநன்றிங்க கலகலப்ரியா. மகிழ்ச்சியா இருக்குங்க.......
ReplyDelete