Thursday, September 23, 2010

வன [ தே]வதை.


சதுப்பு நிலக் காடுகளின் வளமை
வண்ண மலர்களின் அணிவகுப்பு
முள்ளோடிருந்தாலும் ரோசா அழகுதானே
மெல்லிய இதழ்களைக் காப்பதற்காகவே
முள்ளைப் படைத்திருப்பானோ அந்த மாயவன்?

விதவிதமான மணங்கள் மனத்தை நிரப்புகின்றன வனத்தில்
ரோசா கூட்டத்திற்கிடையே காகிதப் பூக்கள்
காகிதப் பூக்களும் காட்சிக்கு அழகுதானே?
மணமுள்ளதும், மணமில்லாததும், இரண்டும் இணைந்ததுதானே இயற்கை
இரசிக்கத் தெரிந்த மனம் இருந்தால் பிரபஞ்சமே அழகுதானே!


சதுப்பு நிலங்களையும் வரண்டு போகச் செய்யும்
இரக்கமற்ற குப்பைக் கூளங்கள்.................
உயிர் நீரை உள்வாங்கத் தடைச் செய்யும்
மக்காத அரக்கக் கூட்டம் - பிளாஸ்டிக் பொருட்கள்!


நகரத்தின் நாராச இரைச்சல் தாங்காத முயல் குட்டி ஒன்று,
வனத்தின் வண்ணம் நாடி துள்ளி வந்து
படைப்பின் பிரம்மாண்டங்கள் கண்டு அதிசயித்து,
மேடு, பள்ளம் அறியாமல் உற்சாகமாக சுற்றித் திரிந்தது.


அங்கே ஒரு எமதூதன் தனக்காக்க் காத்திருப்பதை உணராமல்,
வண்ண வண்ண நிறத்தில் காட்சிப் பிழையாக,
காற்றில் அலைந்து கொண்டிருந்த பொருட்களை,
புதுமையான தனக்கான உணவென எண்ணிய கொடுமை........
அந்தோ.............பரிதாபம்.................


21 comments:

  1. ஈரோட்டுக்காரவுக எல்லாம் ப்ளாஸ்டிக்குக்கு எதிரா அணி சேர்ந்தாச்சா:). நல்ல விஷயம்.

    ReplyDelete
  2. முயல் குட்டியைப் போல் மனிதர்களின் எதிர்காலத்தை நன்கு விளக்கியுள்ளீர்!

    ReplyDelete
  3. நித்திலம்...சமூக அக்கறையோடு நிறைய வெதும்பியிருக்கிறீர்கள் கவிதையில்.

    ReplyDelete
  4. நன்றிங்க நசரேயன்.

    ReplyDelete
  5. நன்றி சார். அடுத்த முறை நீங்க எங்க ஊருக்கு வரும் போது பாருங்க சார்...பச்சை புல்வெளி பட்டுக் கம்பள வரவேற்பு உங்களுக்கு.......

    ReplyDelete
  6. தேவன் மாயம் சார், வாங்க சார். உண்மை.......உண்மை.

    ReplyDelete
  7. ஆமாங்க.....ஹேமா. நன்றிங்க.

    ReplyDelete
  8. சதுப்பு நிலங்களையும் வரண்டு போகச் செய்யும்
    இரக்கமற்ற குப்பைக் கூளங்கள்.................
    உயிர் நீரை உள்வாங்கத் தடைச் செய்யும்
    மக்காத அரக்கக் கூட்டம் - பிளாஸ்டிக் பொருட்கள்!

    .....ஏற்படுத்தி இருக்கும் தீய விளைவுகளையும் - காத்து இருக்கும் ஆபத்துக்களையும் - தெளிவாக சொல்லி எச்சரிக்கும் கவிதை..... ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  9. அருமை, தேவையான ஒன்று :)

    ReplyDelete
  10. நன்றிங்க சுபாங்கன்.வாங்க, வணக்கம்.

    ReplyDelete
  11. நல்ல சமூகக் கவிதை

    ReplyDelete
  12. வருக, வணக்கம் தியா. நன்றிங்க.

    ReplyDelete
  13. நல்ல கவிதைங்க.. இந்த அக்கரையென்பது எல்லாருக்கும் வேணும்.. எவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள்.. முயலுக்கு வந்த கதி நாளை மனிதனுக்கும் வராது என்பது நிச்சயமல்ல... விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். நன்றிங்க.

    ReplyDelete
  14. நன்றிங்க பாலாசி.நீங்க சொல்வது ரொம்ப சரிங்க.

    ReplyDelete
  15. உங்கள் எண்ணவோட்டம் அழகு.., சமூகத்தின் பால் கொண்ட அக்கரையும்தான். முயல் போன்ற மென்மையான சிற்றுயிர்கள் வாழ முடியா நிலமை சொல்லி, மானிடம் சாகடிக்கும் "இயற்கை" யை காக்கும் எச்சரிக்கை.......ம்ம்ம்ம்ம்.
    முடியும் போது வாருங்கள்....( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  16. 'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

    http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


    5 important blogs for bloggers

    http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

    Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

    http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

    add subscribe via email gadget

    http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

    ReplyDelete
  17. வித்யா நன்றிம்மா.

    ReplyDelete
  18. தமிழ்க்காதலரே, வருக, வணக்கம்.நன்றிங்க.

    ReplyDelete
  19. ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

    தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

    இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

    வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
    உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

    நன்றி..

    அன்புடன்...
    பாரத்பாரதி-க்காக

    எஸ்.பாரத்,
    மேட்டுப்பாளையம்...

    ReplyDelete
  20. நன்றி நண்பரே. கண்டிப்பாக நல்ல முறையில் செய்யலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை.........விரைவில் சந்திப்போம் நண்பரே, வாழ்த்துக்கள்.

    ReplyDelete