Friday, October 1, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்- பாகம்- 2.


'உடல் வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே' என்பார், திரு மூலர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்............ தயவு செய்து, இது பெண்கள் சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் இருவருக்கும் பொதுதானே. மிக எளிமையாக சமைக்கக் கூடிய இரண்டு ரெசிப்பிக்கள் நீங்களும் முயற்சித்து குடும்பத்தாரையோ அல்லது பேச்சிலராக இருந்தால் நண்பர்களையோ அசத்தலாமே.

உடல் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி அடைய வேண்டுமானால்,
சரிவிகித உணவு உட் கொள்வது மிக அவசியம். குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை, அனைவருக்கும் சத்தான உணவு மிக அவசியம். கர்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கூடுதல் கவனம் தேவை. பலவிதமான உணவு வகைகளைக் கொண்டதே, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான சரிவிகித உணவு எனப்படுவது.

நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே, நல்ல சத்தான, அன்றாட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும். இன்றைய அவசர யுகத்தில், 'விரைவு உணவு', பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே இப்படி காலத்திற்கேற்றவாறு, சுவையை மாற்றிக் கொண்டு, புதிய, புதிய நோயினால், அவதிப்படுகிறார்கள். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள், காலங்காலமாக, அதே இயற்கை உணவு
வகைகளையே உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழுகின்றன.

அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளே நம்முடைய அடிப்படை உணவாகும். நல்ல கட்டுப்பாடான உணவுப் பழக்கமே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகும். அடித்தளம் உறுதியானதாக இருந்தால்தான், கட்டிடம் நிலைத்து நிற்கும்........புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்,சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவையனைத்தும் சரியான அளவில் சேர்ந்தது தான் சரிவிகித உணவென்பது.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, கொழுப்புச் சத்தும் ஓரளவிற்கு அவசியமாகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும், எண்ணெய் வகைகள், உடலுக்குத் தேவையான, சக்தியைக் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய மேல் தோல் பளபளப்பாக இருப்பதற்கும் இந்த கொழுப்புச் சத்து பயன்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புச் சத்து அளவிற்கதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காலை நேரம் [Break - Fast] அதாவது, இரவு முழுவதும் விரதம் இருக்கும் வயிரை காலையில் கட்டாயமாக நல்ல சத்தான உணவுடன் குளிரச் செய்ய வேண்டும். மதியம் அளவான சாப்பாட்டுடன், அதிகமான காய்கறிகளும், கீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு சற்றே மிதமான , ரொட்டி, சப்பாத்தி, காய்கறிகளுடன் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் எத்தனை வயது வரை உயிர் வாழ்கிறோம் என்பதைவிட, நோயில்லாமல் எத்தனை வயது வரை இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியம் என்பது முழுவதும் நம் கையில் தான் உள்ளது.

குறைந்த கலோரி உணவு வகைகளைப் பார்க்கலாம்.

ரவா மசாலா இட்லி.

8 இட்லிகள் செய்வதற்கு தேவையானவைகள் ;
ஒரு இட்லி 40 கலோரிகள்.

ரவை 1 கப்
தயிர்[கொழுப்பில்லாதது] - 2 கப்
ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.
ஆப்ப சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.
சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2 அல்லது 3.
மிளகு - 1/4 ஸ்பூன்.
சீரகம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச்.


13 comments:

  1. உண்மைதான்.. நமது முன்னோர்கள் தெரியாமலா இதை எல்லாம் உபயோகப் படுத்தினர் ?? நாகரீகம் என்றப பெயரில் நமது உடலை நாமே கெடுத்துக் கொள்கிறோம். நல்ல சத்தான உணவுக் குறிப்புக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றிங்க எல்.கே. எப்படிங்க.....இவ்வளவு ஸ்பீடு..... சரி ஒரு சின்ன உதவிங்க...... உங்க கவிதைப் போட்டில என்னோட கவிதைக்கு தலைப்பு 'பொன் சிறகு' ன்னு போட்டு விடுகிறீர்களா? அதுக்கு ஒரு நன்றி....

    ReplyDelete
  3. அடிக்கடி இந்த மாதிரி லோ காலரி ரெசிபி போடுங்க மேடம். ரவை இட்லிக்கு மாவு கொஞ்சம் நேரம் ஊற வேண்டாமா? நான் ஒரு தடவை ட்ரை பண்ணி பார்த்தேன். அத வச்சு ஸ்ட்ராங் பில்டிங் கட்ற அளவுக்கிருந்தது:)

    ReplyDelete
  4. ரவா மசாலா இட்லித் தயாரிப்போடு நல்ல தேவையான பதிவு.நன்றி நித்திலம்.

    ReplyDelete
  5. நன்றிம்மா வித்யா. ஊற வைக்க வேண்டாம்மா. மாவைக் கலந்து, உடனே ஊற்ற வேண்டும். ஊற வைத்து ஊற்றினால் மேலே வழு வழுப்ப்பாகிவிடும். எப்படி இருந்தாலும், Eno Fruit Salt போட்டால் இட்லி கண்டிப்பாக மிருதுவாக இருக்கும். நான் அடிக்கடி செய்வேன் வித்யா.கேரட் வேண்டுமானாலும் துருவி சேர்த்துக் கொள்ளலாம், அலங்கரிப்பதற்கு.

    ReplyDelete
  6. //இட்லி கண்டிப்பாக மிருதுவாக இருக்கும். நான் அடிக்கடி செய்வேன்//

    சொல்லவேயில்ல......ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. Eno fruit salt சூப்பர் மார்க்கெட்களில் சாதாரணமாக கிடைக்கக் கூடியதுதானா?

    ReplyDelete
  8. நன்றிங்க ராமலஷ்மி. ஆமாங்க Eno fruit salt, எல்லா சூப்பர் மார்கெட்களிலும், எளிதாகக் கிடைக்கக்கூடியது தாங்க. பாட்டில் மற்றும், சிறிய சேஷேவிலும் கிடைக்கிறதுங்க........உடல் நலத்திற்கும் இதனால் எந்த சேதமும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள்.

    ReplyDelete
  9. அட ஆரூர், நீதான் இப்ப மனைவி சொல்லே மந்திரம், அவ கைப்பக்குவமே தேவாமிர்தம்னு இருக்கியே, நான் சொல்றது எப்படி காதுல உழும்?

    ReplyDelete
  10. மேடம் நேற்றைக்கு பண்ணினேன். Came out well:))

    ReplyDelete
  11. ஓ, அப்படியா வித்யா, அப்ப சரி, உனக்காக இன்னுமொரு ரெசிபி, ஓகே.

    ReplyDelete
  12. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...