Saturday, October 30, 2010

எழுத்தறிவிப்பவன்.................


மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, மாதா, பிதாவிற்கு அடுத்த இடமும், தெய்வத்திற்கு மேலான இடமும் கொடுத்து வைத்துள்ளது நம் கலாச்சாரம். முன் காலங்களில் 'குருகுலம் ', என்று குழந்தைகளை சேர்த்து விட்டால், அங்கு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் முதல் கல்வியுடன், சகல கலைகளையும் கற்றுத் தருவார்கள். அரசனின் குழந்தையாக இருந்தாலும், ஆண்டியின் குழந்தையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்துதான் கல்வி பயிலுவார்கள். குரு சொல்லும் வாக்கை தெய்வ வாக்காகக் கொண்டு மாணவர்கள் அடி பணிந்து நடப்பார்கள்.

காலப் போக்கில் அந்த முறை மாறி, மறைந்தே விட்டது. பிறகு வந்த காலங்களில் குருவிற்கு, ஆசிரியர் என்று ஓரளவிற்கு மதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஆசிரியர்களில் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறை அந்த தெய்வீகப் பணியின் மீது ஒரு வெறுப்பையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்களின் சேட்டைகள் அதிகரித்திருப்பது போல ஆசிரியர்களின் அடக்கு முறையிலும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பள்ளியில் அப்படி ஒரு தண்டனை தவறு செய்யும் குழந்தைகளுக்குக் கொடுப்பதாக நாளிதழில் படித்த போது, அதிர்ச்சியில் உரைந்தே போனேன். ஆம் அந்நியன் டெக்னிக்கில் 'கும்பிபாகம்' தண்டனை!

அதாவது தவறு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து, அந்த மரத்தின் அடிபாகத்தில் இருக்கும் செவ்வெறும்புகளை கடிக்க விடுவது. அந்தக் குழந்தைகள் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி எறும்பு கடி தாங்காமல் உதைக்கும் காட்சியைக் கண்டுகூட மனம் இரங்காமல் குறிப்பிட்ட நேரம் வரை அவ் வேதனையை அக் குழந்தை தாங்கியே ஆக வேண்டுமாம். பெற்றவர்கள் இக்காட்சியைக் காண நேர்ந்தால் என்ன ஆகும்? ஆனால் இந்த விவரமான ஆசிரியர்கள், அத்தகைய தண்டனையைப் பற்றி வீட்டிலோ, வெளியே யாரிடமோ சொன்னால் 'டிசி' கொடுத்து பள்ளியை விட்டே வெளியே அனுப்பி விடுவோம் என்ற மிரட்டல் வேறு விடுவார்களாம். குழந்தைகள் பயந்து போய் வெளியிலும் சொல்வதில்லையாம். இப்போது எப்படியோ செய்தி வெளியே பரவி, சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதெல்லாம் தனியார் பள்ளிகள் பல, வருமானங்களை மட்டுமே குறிவைத்து, சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல், ஆசிரியப் பயிற்சி கூட எடுக்காத வெறும் பட்டம் மட்டுமே பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே பள்ளியை நடத்துவதுதான் இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகின்றன, என்பதே பெற்றோரின் வாதமாக உள்ளது. ஆசிரியர் பயிற்சியில், குழந்தைகள் மனோத்தத்துவம் [child psychology] பயிற்றுவிக்கிறார்கள். அதன் மூலம் குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல கல்வி புகட்ட முடியும். ஆனால் இது போன்று பயிற்சி பெறாத ஆசிரியர்களே, பெரும்பாலும் குழந்தைகளை இவ்வாறு மனிதாபிமானமில்லாமல் நடத்துகிறார்கள். இச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

12 comments:

  1. நானும் படித்தேன். கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete
  2. அடக் கொடுமையேயேயேயேயே!!!!!!11

    ReplyDelete
  3. வருத்தமானது. கண்டிக்கத்தக்கதும் கூட:((

    ReplyDelete
  4. In our India all children are Egalaivans.Unless the punishment is severe to all such teachers this will go on

    ReplyDelete
  5. பசங்களுக்கு மனநல உதவி இருக்கோ இல்லையோ வாத்திமாருக்கு அவசியம் தேவை.

    ReplyDelete
  6. இறுதி பத்தியின் சாராம்சம் - பலரும் கருத்தில் கொள்ள வேண்டியது. நல்ல பதிவுங்க!

    ReplyDelete
  7. //இப்பொழுதெல்லாம் தனியார் பள்ளிகள் பல, வருமானங்களை மட்டுமே குறிவைத்து, சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல், ஆசிரியப் பயிற்சி கூட எடுக்காத வெறும் பட்டம் மட்டுமே பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே பள்ளியை நடத்துவதுதான் இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகின்றன,//

    மிகவும் சரி சிறுவயதிலேயே மாணவர்களின் மனத்தில் கொடுமையானதண்டனைகள் பதிந்துவிடுவதற்க்கு ஆசிரியர்களே முழு முதற்காரணம் , பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அவர்கள் அனுபவித்ததை அடுத்த சந்ததிகளுக்கு அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்!

    ReplyDelete
  8. kodumai yen ippadilam manasatshi ilamal nadandhukaranga

    ReplyDelete
  9. கண்டிக்கத்தக்கதும் வருத்தமானதும். கருத்தில் கொள்ள வேண்டியது. நல்ல பதிவு. சென்றடையட்டும் அனைவருக்கும்..

    ReplyDelete