காதல் சின்னம்.


காதல் சின்னம்

அற்றைத் திங்களின்
அற்புத நிலவொளியில்
அரசனின் அந்தப்புரத்தின்
அரசனையில் அழகுப் பதுமையாய்
அன்பு மனம் கலந்திருந்த
அரிதான தருணமதில்
அட்சர சுத்தமாய்
அன்புக் கட்டளையிட்டாள்
அரியணைப் பதுமையாம் மும்தாசு.

இற்றைத் திங்களில்
இந் நிலவொளியில்
இம்மையில் இனியும்
இச்சை கொண்டொரு
இல்லாளை வேண்டாமல்
இவ்விரண்டு மக்களையும்
இன்பமுற வாழ வழி செய்து
இந்நிலையை காலம் முற்றும்
இப்புவியுலக காதலர் அனைவரும்
இறுமாப்புடன் நிமிந்து நோக்கும் வண்ணம்
இசைபட பளிங்கு மாளிகையது அமைத்து
இச்சகத்து மாந்தரும் இன்பம் பெற
இணையிலாதொரு காதல் சின்னம் அமைக்கவே

ஓம்காரமாய் ஓங்கி ஒலிக்குதொரு
ஒய்யார மண்டபம் ஒயிலாய்
ஒத்த மனமுடைய மனிதரையும்
ஒண்ணாய் உயிர் சேர்க்கச் செய்கிறது
ஒருமையாய் ஓய்ந்து போன உள்ளமும்
ஒத்தாரை உறவோடு ஏற்றுக் கொள்ளும்
ஒப்புயர்வில்லா உன்னத நிலையையும்
ஒருகாலும் மாறாத அன்பையும்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓம்கார நாதனின் தண்ணளி வீசி
ஓங்கி உயர்ந்து நிற்கும் மாமலையாமே!!

Comments

 1. சமாதில சாமியக் கலந்துட்டீங்கன்னு சங் பரிவார் வரப்போறாய்ங்க:))

  ReplyDelete
 2. நன்றி சார். எம்மதமும் சம்மதம் தானே..... காதலுக்கு.......

  ReplyDelete
 3. அபாரம்! அசத்துட்டீங்க......
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. இறந்தவர்கள் கடவுளுக்குச் சமம்தானே !

  ReplyDelete
 5. நல்ல கவிதை...

  ReplyDelete
 6. நல்லா இருக்குங்கோ...

  ReplyDelete
 7. நல்லாருக்கு.

  பொங்கல் திருநாள் வாழ்த்துகள் மேடம்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

பதின்மப் பருவத்தின் வாசலிலே

அழகு மயில் ஆட ........ !