Thursday, July 28, 2011

சூர்யோதயம்!






ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!

அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்!
பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!
நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!

கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!
இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!
கணைவாய் கருமை இருளை - கதிரோனே!
எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!
தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!
இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!
துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!
பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!
குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!

1 comment:

  1. காரிருள் நீக்கும் கதிரவனைப் போல் மன இருள் போக்கும் அருமையான கவிதை.

    ReplyDelete