Wednesday, January 11, 2012

ஆகா, தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா!

நறுக்.. துணுக்…

பவள சங்கரி

தமிழ்மொழி 50,000 ஆண்டு வரலாற்றுப் பழமை பெற்ற மொழி. தமிழ்மொழி உலக மொழிகட்கு 1800 வேர்ச் சொற்களும், 180 மொழிகட்கு உறவுப்பெயரும் தந்துள்ளதை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. அதிலும் சிவசமயம் 22,000 ஆண்டுகள் பழமை கொண்டதாம். திருமந்திரம் என்பது 8000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சித்தர் நெறி நிற்கும் மந்திர, தந்திர வழிபாட்டு நூல். திருக்குறளும், திருமந்திரமும் நம் தமிழ்த்தாயின் இரு கண்கள் என்று போற்றத்தக்க தெய்வாம்சமும், வாழ்க்கை நெறிகளும் கொண்டனவாகும். திருமந்திரம் இயற்றியவர், 3000 ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் என்ற சித்தர். இப்படிப் பல சித்தர்களைக் கொண்ட நாடு நம் தமிழ்நாடு.

“நெற்றிக்கு நேரே புருவத்திடை வழி
உற்று உற்றுப்பார்க்க ஒளிவரும் மந்திரம்”

சிற்றம்பலம் எனக் காண்பவர். சிவசமய வரலாறு கூறுவது போன்று சித்தர்களுக்கு சிவன் சீவனுக்குள் எழுந்தருளும் என்பதால் அவர்கள் அட்டமாசித்திகளும் பெற்றுச் சாகாக்கலை நிறைந்தவர்கள் என்பதையும் அறியலாம்!

படத்திற்கு நன்றி : http://thirukkural.net.in/Thiruvalluvar.html

5 comments:

  1. interesting! இந்த வேர்ச்சொற்களுக்கான விவரங்கள் எங்கே கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.
    22000 வருஷத்துக்கு முன்னாலே சமயம் இருந்ததுனு நம்பமுடியவில்லை. இப்படி ஏதாவது கதை கட்டி விடுகிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது. பத்தாயிரம் வருடத்துக்கு முன்பு கூட காட்டுவாசிகளாகத் தான் இருந்தோம். அதாவது உணவைத் தவிர எதையும் சிந்திக்கத் தெரியாத நிலை. சமயம் என்பதற்கான organization வழிமுறைகளை அறிந்திருக்கச் சாத்தியம் இல்லை.

    ReplyDelete
  2. நன்றி திரு அப்பாதுரை. விரைவில் இதற்கான விளக்கத்தையும் , கொடுக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  3. அன்பின் திரு அப்பாதுரை சார்,

    சித்தாந்த நண்மணி, தமிழ்மாமணி, திருமுறைத்தென்றல், கல்வெட்டியல் அறிஞர் முனைவர் கா.அரங்கசாமி (கோபி) அவர்களின், ‘ திருமந்திரத்தில் சித்தர்’ என்ற கட்டுரையில் இந்த விளக்கத்தைக் காண முடிகிறது.

    ReplyDelete
  4. விளக்கம் இருக்கலாம், மறுக்கவில்லை.
    சாத்தியம் தான் உறுத்துகிறது. தேடிப் பிடித்துச் சொன்னதற்கு மிகவும் நன்றி.
    மொழி மேலிருக்கும் மோகத்தினால் இது போல் நிறைய சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
    இருந்துவிட்டுப் போகட்டும், விடுங்கள்.

    ReplyDelete