Thursday, March 15, 2012

கோடை மழை!


புற்று நோய் என்றாலே அதன் வலியின் கொடுமையைப் போன்றே, அதற்கான மருந்துகளின் விலையின் சுமையும், அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தாருக்கு அதே அளவு வேதனை அளிப்பதகாவே இருக்கிறது. ’நெக்ஸ்வார்’ என்ற, சிறுநீரக மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மாத்திரைகள் , 120 மாத்திரைகள் கொண்ட பெட்டியை,பேயர் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், இந்தியாவிற்கு ரூ2.84 லட்சத்திற்கு விற்று வந்தது.

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்குக் காப்புரிமைச் சட்டத்தின், சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதன் விளைவாக, இதே நெக்ஸ்வார் மாத்திரைகள் இப்போது ரூ 8,880க்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது புற்றுநோயாளிகளுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் வயிற்றில் பாலை வார்த்த ஒரு செய்தியாகவே இது உள்ளது. ஆண்டுக்கு 600 ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக இம்மாத்திரைகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் இந்திய காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு நன்றி :

http://medicineworld.org/cancer/lead/1-2007/kidney-cancer-study-published-in-nejm.html

நன்றி : வல்லமை.

5 comments:

  1. கோடை மழையாக வந்திருக்கும் நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராமலட்சுமி. தங்கள் வருகைக்கு நன்றி தோழி.

      Delete
  2. மிக நல்ல விஷயம் மேடம். புற்று நோய்க்கு ஒரு முழு விடிவு வந்தால் நன்றாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆம், சரியாகச் சொன்னீர்கள் மோகன் குமார். முழு விடிவு என்பது இன்று ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கிறது அல்லவா...? ஆரம்பத்தில் கண்டறியப்படும் அறிகுறிகள் மூலமாக முழுவதும் குணப்படுத்த முடியும் என்கிறார்களே.. அதற்கான புதிய கண்டுபிடிப்பு கருவிகளும் வந்துவிட்டதே. மருத்துவம் எவ்வளவுதான் முன்னேறினாலும், இந்த புற்று நோய் வியாதி ஏற்படுத்தும் ரணம் வேதனைதான் இல்லையா.....

      Delete