Wednesday, March 28, 2012

LEAD, KINDLY LIGHT – மொழிபெயர்ப்பு

சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!
ஜான் எச்.நியூ-மேன் – 1833
இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான் நியூமேன் நோய்வாய்ப்பட்டு, மூன்று வாரங்கள் ஜியோவானியில் ஒரு குடிலில் தங்க வேண்டியதாகிறது. உடல் நலம் பெற்று பேலர்மோவிற்குத் தம் பயணத்தை தொடர்ந்தார்.
”என் தங்குமிடத்திலிருந்து புறப்படும் முன் என் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டு வேதனையுடன் தேம்பியழ ஆரம்பித்தேன். என் செவிலியராக பணியாற்றிய உதவியாளர் அதற்கான காரணத்தைக் கேட்டார். உடல் நலனில் ஏதேனும் கோளாறு உளதோ என்று”
“இங்கிலாந்தில் யாம் செய்ய வேண்டிய பணி ஒன்றுள்ளது. எமக்கு எம் இல்லத்தின் நினைவு வந்து எமை அலைக்கழிக்கிறது. ஆயினும், ஓர் பெரிய படகு வேண்டி பேலர்மோவில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தேன். கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து, அங்கு எந்த சேவைகளும் செய்யாவிட்டாலும்கூட, எம் பொறுமையின்மையை சற்றே தாங்கிக் கொள்ள முடிந்தது. இறுதியாக மெர்சிலிஸின் எல்லைக்குட்பட்ட ஓர் இளஞ்செவ்வண்ண படகில் ஏறினேன். அந்த ஒரு வாரமும் போனிபேசியோவின் நீர்க்காலில், நாங்கள் மிக அமைதியாக இருந்த அந்த வேளையில்தான் இந்த வரிகளை எழுதினேன் .சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து, – அன்றிலிருந்து அனைவராலும் அறியப்பட்ட ஒன்றானது. இஃது……”
சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!
சூழ்ந்துள்ள அரையிருளினூடே தயைகூர்ந்து சோதியை எம் மீது செலுத்தி எமை வழிநடத்து!
யாம் இல்லம் விட்டு வெகு தொலைவிலும், இரவின் இருளிலும் உள்ளேனே.
நீர் எம்மை வழிநடத்தும்!
எம் பாதங்களை உம் காப்பில் கொள். தொலைவின் காட்சியை காணச் சொல்லவில்லையே யான், ஓர் அடி போதுமே எமக்கு.
நீர் எம்மை வழிநடத்த வேண்டுமென்ற எந்த வேண்டுதலும் எம்மிடம் இல்லை.
எம் பாதையைத் தெரிவு செய்து காணவே யாம் விரும்பினோம், ஆயினும் தற்போது நீர் எம்மை வழிநடத்துமே!
யான் பகட்டின் மீதும், வன்மத்தின் அச்சம் மீதும் நாட்டம் கொண்டேன், எம் விருப்பங்களை அகந்தை ஆட்சி செய்தது. கடந்த காலங்களை நினைவில் கொள்ள வேண்டாமே!
இதுகாறும் எமக்கு நல்வாக்கருளிய அந்த சக்தி, இனியும் கட்டாயம் எம்மை வழிநடத்தும்.
முட்புதர்களின் மீதும், சதுப்பு நிலங்களின் மீதும், செங்குத்தானப் பாறை மற்றும் விசை நீரோட்டம் மீதும், இரவு விடைபெறும் வரை,
அந்தக் காலையுடன் வெகுகாலமாக யான் காதலித்துக் கொண்டிருந்த அத்தேவதைகளின் புன்னகையையும், சில மணித்துளிகள் இழந்தேன்!
இடைக்காலத்தில், தங்கள் காலடிபட்ட குறுகிய கரடு முரடான பாதையினூடே,
வழிநடத்தும் காப்பாளரே, குழவியைப் போன்றதொரு நம்பிக்கையுள்ள எம்மை எம் இல்லத்திற்கு வழிநடத்தும்,
எம் கடவுளுக்கான இல்லம்.
நிலவுலகிற்கேயுரித்தான சண்டை சச்சரவுகளுக்குப் பிறகு
அமைதியான சோதியின் நித்திய வாழ்க்கையின் நிரந்தர ஓய்வு.

LEAD, KINDLY LIGHT - மூலம்


நன்றி : வல்லமை

2 comments:

 1. Aha.. What a verse, and what a translation!.
  This was the verse that was enacted when I was 10 years old, in my school, SSKV, Kanchi, by older children. From then on, till now, I remember this song. And the dance. I also wonder at the wide hearts of my teachers, who included this in the annual day, . What a song, what a school, what principles, they imbibed!!


  Thanks a lot.

  ReplyDelete
 2. வாருங்கள் வெற்றி மகள். வணக்கம். தங்கள் வரவிற்கு நன்றி. உண்மை.நம் இளமைக்காலங்களை நினைவில் நிறுத்தும் அரியதொரு பாடல்தான்..... மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன்

  பவள சங்கரி.

  ReplyDelete