Friday, June 1, 2012

திருமணச் சந்தை


நன்றி :

In and Out Chennai Magazine



கல்லூரி வாழ்க்கை
விடைபெறும் நேரம்
தொழிலுக்கு வந்தனை
செய்யும் யோகம்.

டாலர் கனவுகளின்
முடிசூட்டுவிழா
நிறைவேறும் காலம்.

ஒழுக்கமும் உயர்வும்
நற்குடும்ப பாரம்பரியமும்
ஒருங்கே இணைந்த உன்னதம்.

திருமணச்சந்தையில்
நல்லதொரு கௌரவமான
வரவேற்பு.

வேட்டையாடி வென்ற
களிப்பில்
பெண்ணின் உற்றார்.

மகன் இல்லாத குடும்பத்தில்
வரமாய் வந்த
தங்கமனசுக்காரன்.

வலியின்றி வேதனையின்றி
பெற்ற மகனாய்
பட்டம் கட்டி
வாரிசாக்கிய வள்ளல்கள்.

விதையூன்றி நாத்துநட்டு
மரமாகி கனிகொடுக்கும் வேளையில
தேவதையின் கடாட்சம்.

வாழ்த்துமழை பொழியும்
பெத்தமனம்
கண்ணீர் மழையில்
நனையும் உள்மனம்.

காசியும் கயிலையும்
தரிசிக்க
அளித்த புண்ணியம்.

சக்தியாய் வந்த முன்காலம்
பக்தியாய்
மாறிய பின்காலம்.

சக்தியும் பக்தியும் எளிதாய்
அமையப்பெற்ற
பெற்றோரின் வசந்தகாலம்.

விலைபோன சக்தியும்
வரமாய்வந்த பக்தியும்!

தானமாய்ப் போன உறவும்
பாரமாய் ஆன நினைவும்!

சக்தியும் புத்தியும்
மகவு மகிழ்வாய் வாழ
பிரார்த்திக்கும்
பெத்த மனம்!





4 comments:

  1. ஒரு கல்யாணக் கலாட்டாவே கவிதைக்குள்ள இருக்கு !

    ReplyDelete
  2. வாழ்க்கையின் முதல்படியில் இத்தனை அழுத்தங்களா..! பாவங்க பட்டதாரிங்க.

    (விதம் விதமாய் எத்தனை பத்திரிகைகள்!)

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அப்பாதுரை சார்,

      நீங்க சொல்றது ரைட்டுதான்...

      அன்புடன்
      பவளா

      Delete
  3. அன்பின் ஹேமா,

    வருக, வணக்கம், நன்றி.

    ReplyDelete