பச்சிளம் பதுமையாய்
பாதச் சிறகுகள் விரித்த
நீண்ட பாதை நோக்கிய
தெளிவில்லாத பயணம்!
தெளிவில்லாத பாதையாயினும்
தொய்வில்லாத உறுதியான
பயணம்தான்!
கடந்துபோனதை மறந்து போயினும்
கரடு முரடாய் எதிர் வரப்போகும்
பாதையாயினும் கவனமாய் அடிஎடுத்து
காட்டாற்று வெள்ளமாயினும்
துணிவாய் நீந்திக் கரைசேரும்
வல்லமையும் பெறுவாய்!
உயிரற்ற கரடிக்குட்டியுடன்
உறவாடித் திரிந்தது போதும்
உரசித் திரியும்
உயிருள்ள கரடிகளிடமிருந்து
தற்காத்துக்கொள்ளும் கலையையும்
பயில்வாய் என் கண்மணியே!
வாழ்வின் ஆதாரமாய்
சுயத்தின் பிம்பமாய்
அழுத்தமான அடிச்சுவடியை
அற்புதமாய் நிலைக்கச்செய்!
படத்திற்கு நன்றி;
http://www.123rf.com/photo_5774484_cute-1-year-old-girl-walking-outdoors-at-autumn-day-focus-on-teddy-bear.html
//உயிரற்ற கரடிக்குட்டியுடன் உறவாடித் திரிந்தது போதும்
ReplyDeleteஉரசித் திரியும் உயிருள்ள கரடிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் கலையையும் பயில்வாய் என் கண்மணியே!//
வாழ்க்கைக்கு எது அத்யாவஸ்யத் தேவையோ அதை வெகு அழகாய்ச் சொல்லியுள்ளீர்கள். நல்ல படைப்பு,. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அழகான அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...