Tuesday, May 27, 2014

சித்த சோரன்

பவள சங்கரி




ரோகிணியில் பிறந்த ரோசக்காரப்பிள்ளையவன்
திட்டுவாங்கினாலும் திருந்த மாட்டானவன்
செவியில் கட்டெறும்பாய் நுழைந்து
செல்லக் குறும்புகள் புரிந்திட்டானவன்
கண்ணைப் புரட்டி விழித்தாலும்
வண்ணம் பரப்பி வறுத்தெடுப்பானவன்
நன்மாலைகள் ஏந்தி நர்த்தனம் புரிந்தாலும்
நடுவானில் நின்று கூத்துகள் பலப்புரிபவன்
விளையாடு புழுதியோடு பூரித்திருப்பவன்

 வெண்ணெய் குணுங்கை வீசியடித்து
வெறுங் கலயத்தை ஓசையெழுப்பி 
செந்நெல் அரிசிச் சிறுபருப்புச் செய்த
அக்காரமாய் கதைகள் பலபேசியும்
அசோதை நங்கையைக் கூவிக்கூவி
குதூகலிப்பான் குறும்புக்காரனவன்
இப்பிள்ளையின் தொல்லை தாங்கவில்லையெனில்
இன்னம் உகப்பன் நானென்று சொல்லியே
புறம்பேசுவோரை புறந்தள்ளியே போதரவுகிறான்
புற்றீசலாய் புதுமைபலவும் புனைந்து போதனாகிறான்!
கண்ணா மணிவண்ணா கருணாகரனே
போதும் உன் விளையாட்டு நிப்பாட்டு!!

No comments:

Post a Comment