இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


பவள சங்கரி


கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும் கோபதியே
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன்
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன் தினம்! தினம்!
கோமகனின் உடனுறை நாயகியாம்
துன்முகியாய் துயர்தீர்க்கும் கோமகளாய்
சித்திரை மகளவள் தருவாள் வரம்! வரம்! தினம்! தினம்!

Comments