Friday, June 24, 2016

மாய உலகில் மனம் பாடும் பாடல்!

பவள சங்கரி
18834492
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முரட்டு உலகம் – இது
உச்சியைத்தொட வக்கணை பேசும் வரட்டு நாதம் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா
இருக்கும் மடமையை வெளிச்சம் போடும் பகட்டு உலகமே – மாயையில்
ஓயாத போட்டியும் பொறாமையும் கூடிய உலகமே – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகம்தான் – இது
பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்
நொந்த பயிரை நோண்டிப் பார்க்கும் கொடுமையை கூடிக் களிக்கும்- கொண்டாடும்
நொந்திடும் தோட்டக்காரனிடம்
பூச்சொரியும் வசனங்களோதும் சில புரட்டு வேதமும் ஓதும்
வகைவகையான புரட்டுகள் வைத்து வதைக்கும் உலகமே – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
மமதைக் குரங்கைத் தாவவிடும் தத்துவ ஞானம் – அதன்
போதையில் மூழ்கும் முற்றும்
வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும்
வம்பும் குலைந்து குரங்கும் வீழ்ந்து அடுத்த மரம் தாவும் – சிலர்
மனமும் இதுபோல சறுக்கி வீழ்ந்து மாயும் பகட்டு உலகமம்மா – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகமம்மா – இது
பட்டாம்பூச்சியாய் தவ்வித்தவ்வி விட்டிலாய் வீழும் விபரீதம்தான் – பாப்பா
புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தெளிய மருந்து சொல்லம்மா
ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்…. ஆ… ஆ… ஆ…. ஆ….

பி.கு. பாடலை அழகாகப் பாடி பதிவு செய்து கொடுத்துள்ளமைக்கு மிக்க நன்றி தோழி கீதாமதி.

நன்றி : வல்லமை - http://www.vallamai.com/?p=69897

2 comments:

  1. அருமையான பாட்டு.
    வாழ்வின் உண்மையை கூறுகிறது.

    ReplyDelete
  2. நன்றிங்க கோமதி அரசு.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...