எனக்கு மிகவும் பிடித்த ஃப்ரூட் சாலட்! எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி ஆர்டரும் கொடுத்துவிட்டார் எங்கள் வீட்டு பிரகஸ்பதி! பில்லைப் பார்த்தால் ஒரு கப் ரூ 140/. அதுவும் ஐஸ் க்ரீம் இல்லாமல்.. பின் அதற்குத் தனியாக விலையைக் கூட்டினார்கள்..
இத்தனைக்கும் 4 வகை பழங்கள் மட்டுமே அதில் இருந்தது.. வேப்பர்சும் கூட இல்லை! அடுத்த நாளே வீட்டில் வந்து நம்ம கைவண்ணத்தில் போட்ட ஃரூட் சாலட் இது. கிட்டத்தட்ட 7 வகைப் பழங்கள் போட்டிருக்கிறேன். இதன் மதிப்பு சுமாராக 40-45 ரூபாய்தான் ஆகியிருக்கும். ஹோட்டலில் கொடுத்தது இதைவிட சிறிய கப். இதைச் செய்வது பெரிய கம்பசூத்திரம் அல்ல.. வீட்டில் உள்ள பழங்களை பொடியாக நறுக்கி, தேவையான அளவு தேன் ஊற்றி நன்கு கலந்துகொண்டு அதை கப்பில் நிரப்பி மேலே ஐஸ் கிரீமுடன் விரும்பிய அலங்காரம் செய்யலாம். நான் கொஞ்சம் நட்ஸூம், டியூட்டி ஃபுரூட்டியும், வேப்பர்சும் சேர்த்தேன். முன்பெல்லாம் ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்வேன். மில்க்மெய்ட் சேர்த்து. இப்போது கொஞ்சம் சோம்பல்.. கடையில் வாங்கிய ஸ்டிராபெர்ரி ஐஸ்க்ரீம் சேர்த்தேன்.. அதுவும் என் லவ்லி சாய்ஸ்! :-) — feeling happy.
Subscribe to:
Post Comments (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...
வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை கொண்டு செய்யலாம் அது மிகவும் சீப்பாக இருக்கும் ஆனால் ஹோட்டலில் அவர்கள் விருப்பம் போல பழங்களை சீசனுக்கு தகுந்தவாறு சேர்ப்பார்கள் அப்போதுதான் அவர்களுக்கு லாபம் அது மட்டுமல்ல வருமான வரி வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கட்டிட வாடகை லோக்கல் கட்சிகளுக்கு நன் கொடை, பேங்கில் வாங்கிய கடனுக்கு வட்டி பிறகு அவர்களின் லாபம் எல்லாவற்றையும் மனதில் கொண்டு விலையை நிர்ணயிப்பதால் விலை அதிகமாகத்தான் இருக்கும்.
ReplyDeleteஅது சரி வீட்டில் நீங்கள் இப்படி செய்ததை தனியாக சாப்பிட்டால் வயிறு கண்டிப்பாக வலிக்கும் அதனால் பகிர்ந்து சாப்பிடனும் என் விலாசம் தருகிறேன் டோர் டெலிவரி பண்ணிவிடுங்கள்.