“விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவ மென்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்”
(பாரதியார் கவிதைகள். 577)
- “சீயூசூனி” என்னும் பெண் கவிஞர் சீன மொழியில் பாடிய பாடலின் , மாகவி பாரதியின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
பாரதியார் புதுவையில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார், அப்பொழுது பிரெஞ்சு மொழியைக் கற்றிருக்கிறார். “லா மார்ஸெலேஸ்” என்னும் பிரெஞ்சு தேசிய கீதத்தை “அன்னை நன்னாட்டின் மக்காள்” என்று தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். தமிழில் தேசியகீதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்ற இதுவே வித்தாய் அமைந்துள்ளது.
பாரதியின் எழுத்துக்கள் விவேகபாநு, ஞானபாநு, காமன் வீல், ஆர்யா, மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், நியூ இண்டியா, பெண்கல்வி, கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரன் போன்ற இதழ்களில் அவர் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
No comments:
Post a Comment