நல்லை யல்லை!முன்னிலைப் புறமொழி - முன்னால் நிற்பவர்க்குரிய செய்தியை கூறினாலும் நேரிடையாக அவரிடம் கூறாமல், வேறு ஒருவரையோ அல்லது வேறு பொருளையோ விளித்து அச்செய்தியை இலைமறை காயாக புரியவைப்பது. 

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
    எல்லி வருநர் களவிற்கு 
    நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 
(தொல். கற்பு.26, ந.)


நெடுவெண்ணிலவே, (விரைவில் மறையாமல் நெடுநேரம்  காயும் நிலவு) இப்படி நீ இரவில் வந்து பழகும் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வதால் நீ நல்லவரில்லை என்கிறாள் தலைவி. முன்னிலைப் புறமொழியாக நிலவிடம் சொல்கிறாள் தலைவி.

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'