அன்பெனும் சிறைக்குள்
மகாகவி பாரதியின் இறுதி சொற்பொழிவு நிகழ்ந்த எங்கள் ஈரோடை மாநகர கருங்கல்பாளையம் நூலகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக புத்தக தினம் நிகழ்வில் சிறப்புரையாற்ற கலந்து கொண்டபோது நூலகத்திற்கு என்னுடைய சில நூல்களை காணிக்கையாகச் செலுத்தி வந்தேன். அதில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புலனக் குழுவில் அந்த நூலகத்தின் பொறுப்பாளர் அன்புத் தோழி சர்மிளா அவர்கள் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். அதனை பதிவேற்றமும் செய்து எனக்கு அனுப்பி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளவருக்கு என் அன்பார்ந்த நன்றி. கிட்டத்தட்ட  120 சிறுகதைகள், 4 தொகுப்புகளாக வெளிவந்தன. சிறுகதை எழுதி வெகுநாட்கள் ஆகிவிட்டன என்பதையும் நினைவூட்டி மீண்டும் எழுதவும் தூண்டுகிறது இவருடைய உற்சாகமான வாழ்த்து.. மீண்டும் நன்றி தோழி. ஒரு 3 நிமிடம் தான்..  கேட்டுப்பாருங்களேன் ..

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'