சூட்டி மகிழ்வோம் தமிழ் பெயர்கள் - நூல் வெளியீடுமிகச்சிறப்பாக, தமிழியக்கத் தலைவர் வி.ஐ.டி.வேந்தர் உயர்திரு. கோ.விசுவநாதன், பாண்டிச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி, மாநிலங்கள் அவை உறுப்பினர் உயர்திரு வை.கோ. மற்றும் பல்வேறு ஆளுமைகளின் முன்னிலையில் நடைபெற்ற தமிழியக்கம் சார்பில், ‘சூட்டி மகிழ்வோம் தமிழ் பெயர்கள்’ என்ற நூல் வெளியீட்டின்போது வேந்தர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. தமிழ் மொழிக்காக மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழினத்திற்காகாக தமது வாழ்நாளைச் செலவிட முடிவெடுத்திருப்பதை தெரிவித்தபோது மக்களின் பலத்த கரவொலி அரங்கை அதிரச் செய்தது. திரு வைகோ அவர்கள் இதனை ஆதரிக்கும் விதமாக, தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இளைஞர்களின் கல்விக் கண்களைத் திறப்பதற்காகச் செலவிட்டுள்ளவர் மீதமுள்ள வாழ்நாட்கள் முழுவதையும் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும் பயனுறச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேதகு பாண்டி முதல்வர் அவர்களின் மிக இயல்பான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. திரு வை.கோ. அவர்களுடன் தாம் கொண்டுள்ள நட்பு குறித்து தெரிவித்தார். தலைவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை குறித்த நேரத்தில் நிறைவு செய்து ஆச்சரியப்படுத்தினர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அருமையான விருந்தோம்பலுடன் மனம் நிறைவடையச் செய்தார், சகோ. சின்னராசு (திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்) அவர்கள். அனைவருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள். 

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'