மாற்றம்
.. மாற்றம் .. புரட்டிப்போடும் மாற்றம்
ஏற்றமெல்லாம்
தரைமட்டமான ஏமாற்றம்
கழுவில்
ஏற்றத் துடிக்கும் மாற்றம்
கடமையைக்
கருவறுக்கும் மாற்றம்
மடமையை
மதிலாக்கும் மாற்றம்
உடமையைக்
கொளுத்தும் மாற்றம்
மாற்றம்
.. மாற்றம் .. புரட்டிப்போடும் மாற்றம்
ஏற்றமெல்லாம்
தரைமட்டமான ஏமாற்றம்
வாழ்வியலைச்
சூறையாடும் மாற்றம்
வாக்கும்மனமும்
வாடச்செய்யும் மாற்றம்
வளமையெலாம்
வேட்டையாடும் மாற்றம்
வார்த்தையெலாம்
நஞ்சாக்கும் மாற்றம்
மாற்றம்
.. மாற்றம் .. புரட்டிப்போடும் மாற்றம்
ஏற்றமெல்லாம்
தரைமட்டமான ஏமாற்றம்
பொருளாதாரமும்
சேதாரமாகும் மாற்றம்
பொங்கவிடாமல்
பொங்கும் மாற்றம்
பொற்பாதம்
காணத்தவிக்கும் மாற்றம்
பொன்மாலையும்
தீஞ்சோலையான மாற்றம்
மாற்றம்
.. மாற்றம் .. புரட்டிப்போடும் மாற்றம்
ஏற்றமெல்லாம்
தரைமட்டமான ஏமாற்றம்
இயலாதெனும் இம்சையான
மாற்றம்
இச்சையெலாம் இழிவாக்கிய மாற்றம்
இயல்பெலாம் இங்கிதமற்றான மாற்றம்
இருப்பெல்லாம் இல்லாமல்போன மாற்றம்
மாற்றம்
.. மாற்றம் .. புரட்டிப்போடும் மாற்றம்
ஏற்றமெல்லாம்
தரைமட்டமான ஏமாற்றம்
No comments:
Post a Comment