கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் ...

  

 

மன உளைச்சலை உண்டாக்கும் முரண்பாடான சூழலை சமன்படுத்தும் மாபெரும் உபாயமாக இருப்பது இசை. இன்னொலியின் இனிமையுடன் உருவாக்கப்பட்ட இசை அந்த சமன்பாட்டை வழங்குவதன் மூலம் சமூக  வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றுகிறது. ஆற்றல் நோக்கு, ஆன்மிக நோக்கு போன்ற படிநிலைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. அந்த வகையில் ஒரு சில பாடல்கள் நம் மனதினூடே நுழைந்து உயிரோடு கலந்தும் விடுகிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதுமில்லை. அப்படி ஒரு பாடல்தான், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், ‘யார் யார் சிவம், நீ, நான் சிவம்’ என்ற பாடல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசை உலகில் தென்றலாக வலம்வர ஆரம்பித்து   40 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக 40  பேரைத் தேர்ந்தெடுத்து 40 பாடல்களுக்கான விளக்கத்தைத் தொகுத்து நூலாக வெளியிட்டு பாராட்டியிருக்கிறார்கள். எனக்கும் இதில் ஒரு வாய்ப்பு அமைந்ததால் என் விருப்பப் பாடலைப் பற்றி வரைந்திருக்கிறேன் நானும் … படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன் .. நன்றி.

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'