வெளுப்பாய்
இருந்த அதை பாலென
ஏமாந்தது
முதன்முறையாக அல்ல
பசியில்
பத்தும் பறந்துபோம்
என்பதறியா
அவ்வணில்.
இன்று
சோறுகூட எருக்கம்பூவென
ஐயம் கொள்ளவைத்தது
பட்டறிவு
அந்த பிஞ்சு
நெஞ்சில் வஞ்சம்
புகுந்து
பட்டினி போட்டது.
பட்டினியால்
பரிதவிப்பதற்கு தின்று
தீர்த்துவிட
உறுதி கொண்டாலும்
உயிரச்சம்
உரக்க குரல் கொடுத்து
உணர்வுகளைச்
சிறை பிடித்தது.
உலகெலாம்
உணர்ந்து ஓதற்கரியவன்
உவகையோடு
உள்ளொளி புகுத்தி
உத்தமரை
உறுதுணையாக்கி உற்றவை
அனைத்தையும்
பெற்றுத் தந்தவனால்
சுதந்திரமாய்
ஓடித்திரிந்தது.
No comments:
Post a Comment