Saturday, March 18, 2023

கல்வியின் பின்னடைவு எதிர்கால பொருளாதாரத்தின் பின்னடைவு!

 

 

சென்ற ஆண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 4%ஆக இருந்தது நிகழாண்டு 6%ஆக உயர்ந்துள்ள நிலையில்

கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் +2 பள்ளியிறுதியாண்டுத் தேர்வுகளில் 49,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விசயம். (குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள்

38,000 பேர்) காரணம் இது எதிர்காலத்தில் தமிழகத்தில்  தீவிரமான பொருளாதார பின்னடைவிற்கு வழிவகுக்கும். ஏற்கனவே வட மாநிலத்தவர் வந்து வேலை செய்ய வேண்டிய தேவை அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கும் மாணவர்கள் ஒழுங்காக வர விருப்பம் இல்லாத இந்த மனநிலை எதிர்காலத்தை பல விதங்களில் பாதிக்கக்கூடும். தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வில் 5.6% மாணவர்கள் வராமல் இருந்துள்ளனர் .. அரசு இந்தப் பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் திட்டம் தீட்டுவதையும் அவசரகாலத் தேவையாக கருத வேண்டியதும் அவசியம் …  மாணவர்கள் திடீரென்று சமீப காலங்களில் ஏன் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள், ஏன் மொழிப்பாடங்களைத் தவிர்க்கிறார்கள், இன்னும் எவ்வளவு மாணவர்கள் பள்ளிக்கு வரமால் இருக்கிறார்கள் போன்ற ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பாலிடெக்னிக் கல்வி போன்று தொழிற்கல்வி பயின்று முன்னுக்கு வரமுடியுமா என்பது போன்ற ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதாரமே கேள்விக்குறியாகாமல் தவிர்க்கப்படக்கூடும் ….

#பவள சங்கரி

 

 

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...