அன்று சமைந்த பெண்ணின்
நாணம் சுமந்து,
நிர்வாண வானத்திடையே மெல்லத்
தலை தூக்கி இளஞ் செங்கதிர் வீச,
மயில் தோகை கருங்குருவி
கொன்றை மரத்தில் சல சலக்க
எஞ்சிய மழைத் துளிகள்
கொன்றை மணத்துடன்
பன்னீராய்த் துளிர்க்க
அந்த லேசான சிலிர்ப்பும்,
முன்னோரை முன்னிறுத்தி கொக்கரித்த
நஞ்சில் நனைந்து,
பஞ்சாய்ப் பறக்க
செங்கதிரின் வீச்சு தீவிரமாக,
புலியையே முறத்தால் விரட்டியடித்த
தமிழச்சி, நரியின் சல சலப்பிற்கு
அஞ்சாத நெஞ்சுரம்
நஞ்சாகிப் போன எஞ்சிய வஞ்சமும்
பஞ்சாய்ப் பறக்க...........
சக தோழமை மொட்டு மெல்ல.......மலர்ந்தது.
purinja maathirium iruku, puriyatha maathirium irukku
ReplyDeleteநன்று:)
ReplyDeleteஅழகிய கவிதை!
ReplyDeleteநன்றி பாலா சார்.
ReplyDeleteஹாய் LK எப்படி இருக்கீங்க. அது அப்படித்தாங்க!
ReplyDeleteநன்றிங்க சித்ரா!
ReplyDeleteஅழகான உவமைகள், அழகிய கவிதை.
ReplyDeleteநன்றி சகோதரி, உங்களுடைய நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ReplyDelete