Monday, September 13, 2010

சாமிக்கு..............ஒரு கடுதாசி............சாமி.........நீ நல்லாயிருக்கியா.....?
நான் ரொம்ப நல்லாருக்கேன்.........
அம்மா கருவறையிலே ஆனந்தமா சுத்தி வந்தப்ப,
'நீல வண்ண கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடான்னு', அம்மா பாடிக்கிட்டே இருந்தப்ப கேட்க சுகமா இருக்கும்.............

பளபளப்பும், பகட்டுமான வெளி உலகம் அச்சுறுத்திய போது அம்மாவின் அரவணைப்பு பாதுகாப்பா தெரிந்தது........
அம்மாவும், அப்பாவும், பட்டு வண்ண மேனி, ரோசா மொட்டு இதழ்கள், நீலோர்ப்பழக் கண்கள், குண்டு கன்னம்..........இப்படி மாறி மாறிக் கொஞ்சினார்கள்.....

ஆனா திடீர்ன்னு அவங்களுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல...........
என்னைப் பாத்து, பாத்து வேதனைப் படறாங்க.........
இரவெல்லாம் தூங்காம அழறாங்க.........

நான் நல்லாத்தானே இருக்கேன்............
கள்ளங் கபடமற்ற அதே மழலை........
சலனமற்ற பார்வை..........
அழுது புரண்டு அழிச்சாட்டியம் பண்ணும் குணம்....
விருப்பப்பட்ட இடத்துல உச்சா போறது.........
சாப்பிடறது, தூங்கறது எல்லாமே என் விருப்பத்துக்கு ஏத்தா மாதிரிதான்..........


சுற்றங்கள் சூழ்ந்திருக்கும் அந்த சுகமானச் சூழலில் என்னைப் பற்றிய பரிதாபமான விசாரிப்புக்கள்.............
நான் மகிழ்ச்சியாத்தானே இருக்கேன்..........
அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்த்து அழுதா எனக்கும் அழணும் போல இருக்கு.............
அவங்க சொல்லறாங்க.........நான் ரொம்ப பெரிசாயிட்டனாம்........... அப்படீன்னா...... என்ன சாமி........?

எனக்குத்தான் ஒன்னியுமே புரியலியே...........
நான் என்னா செய்யட்டும்.......
உன்கிட்டேயே.......வந்துடட்டுமா............?


சாமியின் பதில் கடிதம்.

இயற்கை வெறும் அலங்கார மலர்களால் மட்டுமே ஆனது அல்ல...........
ஒரு கையில் சிறகும், மறு கையில் சுமையும் கொண்டதே வாழ்க்கை............
கல், மண், சேறு, சகதி இவையனைத்துமே இயற்கையில் அடக்கம்..........
பாரபட்சமற்றது மட்டுமே படைப்பாகும்...........
யாரையும், யாரும் திருப்திப் படுத்துவதற்காக யாரும் அவதரிப்பதில்லை..........
அவரவர் வினைப்பயன் என்பதற்கேற்றவாரே ஒருவரின் பிறப்பு நிச்சயிக்கப் படுகிறது......
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணமும், கடமையும் உண்டு........
மாற்றம் தேவைப்படும் வேளைகளில் இயற்கை தானாகவே அதை நிகழ்த்தும்........

இயற்கை அன்னை தன் செல்வங்கள் அனைத்தையும் தானே அனுபவிப்பதில்லை.............
உலக உயிர்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவே மீண்டும், மீண்டும் உயிர்த்தெழுகிறாள்.........

சமூக வாழ்வியல் அமைப்பே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும், அறிவார்ந்த பண்பேயாகும்........
இன்று நீ ஒருவருக்கு செய்யும் உதவி, நாளை வேறு ஒருவர் மூலம் உனக்கே திரும்பி வரக்கூடும்.............
அது போலத்தான் தீமைகளும்..........
நன்மைகளும், தீமைகளும் சமமாக இணைந்ததே மனித வாழ்க்கையாகும்..........
என் நிலையில் உன் தேவையை நிறைவேற்றி, வழி நடத்தவே
நான் அனுப்பிய தேவ தூதர்களே உன் பெற்றோர்!!
அவர்களால் உன் உலகமே சொர்க்கமாகும்!!

11 comments:

 1. நல்லாயிருக்குங்க:)

  ReplyDelete
 2. ம்ம்ம் ...ஏன் பிறந்திருக்கிறோம் என்கிற தத்துவமா !

  ஏன் எதற்குப் பிறக்கிறோம் என்று தெரியவில்லை.
  பிறந்தபின் மனிதனாய் வாழ்வதே சிறப்பு.

  ReplyDelete
 3. சமூக வாழ்வியல் அமைப்பே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும், அறிவார்ந்த பண்பேயாகும்........
  இன்று நீ ஒருவருக்கு செய்யும் உதவி, நாளை வேறு ஒருவர் மூலம் உனக்கே திரும்பி வரக்கூடும்.............
  அது போலத்தான் தீமைகளும்..........
  நன்மைகளும், தீமைகளும் சமமாக இணைந்ததே மனித வாழ்க்கையாகும்..........

  ..... நல்ல வாழ்க்கை தத்துவம்..... ஆனால், படம் தான் terror ஆக இருக்குது..... ம்ம்ம்ம்.....

  ReplyDelete
 4. ஹேமா, அந்த குழந்தை சிறு குறை உள்ள குழந்தை...........நன்றிங்க.

  ReplyDelete
 5. நன்றிங்க சித்ரா.......இன்னும் தெளிவாக இருந்திருக்க வேண்டுமோ?

  ReplyDelete
 6. நன்றிங்க இர்ஷாத்.

  ReplyDelete
 7. இந்த கட்டுரையை இன்று தான் படித்தேன்.. நன்றி.. என் சிந்தனையையும் தூண்டிவிடுகிறது இக்கருத்துகள்..

  ReplyDelete
 8. நன்றிங்க முத்துலெட்சுமி.

  ReplyDelete