Thursday, September 16, 2010

சுவையான காளான் கறி [Rich Mushroom curry]







தேவையான பொருட்கள்;

மொட்டுக் காளான் - 3 பாக்கெட்
வெங்காயத்தாள் - 1/2 கட்டு
வெள்ளை வெங்காயம் - 2
தக்காளி[நடுத்தரமானது]-2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடைந்த பாலேடு - 1/4 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - வதக்க
நெய் - 2ஸ்பூன்

செய்முறை;

1. வெங்காயத்தையும், தக்காளியையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

2. வெங்காயத்தாளை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

3.காளான்களை நன்கு கழுவி ஒரு துணியின் மீது பரப்பி ஈரம் வற்றியதும் ஒவ்வொன்றையும் 2 துண்டுகளாக வெட்டவும்.

4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில் சீரகம், பச்சை மிளகாய், காளான்கள் இவற்றைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி அதனுடன் வெங்காயத்தாளையும் சேர்க்கவும். பின்பு அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5. அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.

6. இதனுடன் இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தக்காளி இவற்றைச் சேர்க்கவும்.

7. தக்காளி வெந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்பு அரைத்த முந்திரிப் பருப்பு, கடைந்த பாலேடையும் சேர்த்துக் கலக்கவும்.

8. தீயைக் குறைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

9. அத்துடன் வதக்கிய காளான்களையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

10. வாணலியில் சிறிது நெய் விட்டு, உறுகியதும், கரம் மசாலாத் தூள், சீரகத்தூள் இவற்றைச் சேர்த்து குழம்பின் மேல் ஊற்றி மெதுவாகக் கிளறி இறக்கவும்.

11. கொத்தமல்லித் தளையைத் தூவி அலங்கரிக்கவும்.


படத்திற்கு நன்றி.

10 comments:

  1. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குங்க....

    ReplyDelete
  2. ஆமாம் சித்ரா, சுவையும் அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  3. முதல்ல நேத்து சொன்னத ட்ரைப் பண்ணிப் பார்த்துட்டு இது..

    ReplyDelete
  4. ம்ம். சரிம்மா. நன்றி.

    ReplyDelete
  5. வாசனை வருகிறது காளான் கறியில்.நானும் இதே முறையில் சமைப்பதுண்டு நித்திலம்.

    ReplyDelete
  6. நன்றிங்க ஹேமா. ஓ அப்படியா. எனக்குக் கூட இந்த முறை ரொம்ப பிடிக்கும்ங்க.

    ReplyDelete
  7. yes really. welcome Theyvasugandhi. your name is sooooooo sweet. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சூப்பராக இருக்கு.செய்து பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  9. வாருங்கள்....நன்றி ஆசியா ஒமர்.

    ReplyDelete